லாக்டவுனா இருந்தா என்ன? காரியத்தில் கண்ணாய் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. என்ன பண்றார் பாருங்க!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பாக்ஸிங் கற்றுக்கொள்ளும் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயின் மட்டுமின்றி, அம்மா, தங்கை, அக்கா என என்ன கதாப்பாத்திரம் என்றாலும் பிச்சு உதறி வருகிறார்.

அதிலும் குறிப்பாக கிராமத்து ரோல் என்றால் ஐஸ்வர்யா ராஜேஷை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது அவரது பர்ஃபாமன்ஸ்.

ராகுல் ரவீந்திரனுடன்..

ராகுல் ரவீந்திரனுடன்..

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படு பிஸியாக உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மாஸ்க் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து கிளாமர் உடையிலும் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

புதிய போட்டோக்கள்

புதிய போட்டோக்கள்

தொடர்ந்து நேற்றைய மழையை அண்ணன் மகனுடன் சேர்ந்து கொண்டாடினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் போட்டோக்கள் சில இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

பாக்ஸிங் கற்கும் நடிகை

பாக்ஸிங் கற்கும் நடிகை

அதாவது நடிகை ஐஸ்வர்யா தீவிரமாக பாக்ஸிங் கற்று வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடிகர் நடிகைகள் தங்களின் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

Recommended Video

நடுக்கடலில் மனைவியுடன் Dhanush | The Grey Man, Aishwarya Dhanush
அடுத்தப்படத்தில் பாக்ஸரா?

அடுத்தப்படத்தில் பாக்ஸரா?

அப்படி வீட்டில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பாக்ஸிங் கற்று வருகிறார். அவர் தீவிரமாக பாக்ஸிங் கற்று வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அடுத்தப் படத்தில் பாக்ஸரா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X