ஒண்ணு.. ரெண்டு.. மூணு.. நாலு... புதிய விளம்பர படத்தில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

விளம்பர படங்களிலும் நடித்து வரும் அவர் தற்போது புதிய விளம்பர படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தீபாவளியையொட்டி எடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பர படத்தில் அவர் அதன் நன்மைகளை 4 வகைகளாக பட்டியலிடுகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து கோலிவுட், டோலிவுட் என படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது 9க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்தும் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் இவர் கோலிவுட்டில் அறிமுகமானார்.

பல படங்களில் ஐஸ்வர்யா

பல படங்களில் ஐஸ்வர்யா

சமீபத்தில் இவரது நடிப்பில் பூமிகா திரைப்படம் ஒடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அர்ஜுனுடன் இணைந்த ஐஸ்வர்யா

அர்ஜுனுடன் இணைந்த ஐஸ்வர்யா

அர்ஜுனுடன் இணைந்து த்ரில்லர் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். நெல்சன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நியூ சரவணா ஸ்டோர்சின் விளம்பர படமொன்றில் நடித்து முடித்துள்ளார்.

புதிய விளம்பர படம்

புதிய விளம்பர படம்

தீபாவளியையொட்டி இந்த விளம்பர படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சரவணா ஸ்டோர்சில் ஆடைகள் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகளை அவர் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என்று பட்டியலிடுகிறார். மிகவும் இயல்பாகவும் ரசிக்கும்படியாகவும் அந்த விளம்பரப் படம் அமைந்துள்ளது.

 ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சி

ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சி

இந்த விளம்பரப்படத்தில் நடித்தது மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த விளம்பரத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தன்னுடைய இயல்பான நடிப்பின்மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருவது சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X