Aishwarya rajesh: அந்த லுக்குக்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. பிழைக்க தெரிஞ்ச பொண்ணு!
சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியில் தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை மலை போல் குவிந்து வருகின்றன.
சென்னை மகளிர் எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு சினிமாவில், 50 திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர் என்பதால், ஐஸ்வர்யாவிற்கும் சினிமாவில் நுழையவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயது முதலே இருந்தது. இதனால், கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

அட்டக்கத்தி படத்தில்: கலைஞர் தொலைக்காட்சியில் கலாமாஸ்டர் நடுவராக இருந்த மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, நீதானா அவன் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் அமுதா என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

கைவசம் உள்ள படம்: இதையடுத்து, காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். அதன் பின் ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை என அடுத்தடுத்த படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகை இடத்தில் இருக்கிறார். தற்போது இவர் கைவசம் மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, அஜயந்தே ரண்டம் மோஷனம், புலிமட, துருவ நட்சத்திரம், இரண்டு மலையாள படம் என பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியான நடிகையாக இருக்கிறார்.

கிளாமர் லுக்: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மார்டன் உடை அணிந்து கொண்டு கவர்ச்சியில் தூக்கலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இவரின் தீவிர ரசிகர்கள் பிழைக்க தெரிஞ்ச பொண்ணுதான் என்று கருத்துக்களை போட்டோவிற்கு பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











