பிக்பாஸ் பிரபலத்துடன் ஜோடி போடப்போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிக்பாஸ் பிரபலத்துக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த மாதிரி கேரக்டர் என்றாலும் தனது எதார்த்தமான நடிப்பால் ஸ்கோர் செய்து விடுகிறார.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜித்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ரமேஷ்..

பெரிய பர்ஃபாமன்ஸ்
நடிகர் ஜித்தன் ரமேஷ் சில படங்களில் நடித்துள்ள போதும் ஜித்தன் படத்தை தவிர வேறு எந்த படமும் அந்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதிலும் அவரது பர்ஃபாமன்ஸ் பெரிதாக இல்லாததால் சமூக வலைதளங்களில் பெரதும் விமர்சிக்கப்பட்டார்.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் ஒரு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியே ஆரம்பித்த நிலையில் ஜித்தன் ரமேஷ் எந்த படத்திலும் கமிட்டானதாக தெரியவில்லை. இந்நிலையில் ஜித்தன் ரமேஷ் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

புரடெக்ஷன் நம்பர் 40
இந்தப் படத்திற்கு தற்காலிகமாக புரடெக்ஷன் நம்பர் 40 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நெல்சன் வெங்கடேன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கான பூஜை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக ஐஸ்வர்யா ராஜேஷும் ஜித்தன் ரமேஷும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பிஸியான நடிகை
இப்படத்தை இயக்கவுள்ள நெல்சன் வெங்கடேசன், ஒரு நாள் கூத்து மற்றும் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது 3 படங்கள் கைவசம்
கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் பூமிகா திரைப்படம் வெளியானது. தெலுங்கில் ரிப்பளிக் படம் வெளியானது. தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











