என்னோட க்ரஷ் இறந்தப்போ கஷ்டப்பட்டேன்.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
சென்னை : போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், எனது க்ரஷ் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, டாப் நடிகைகளின் பட்டியலில் இருக்கும்.
மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, துருவ நட்சத்திரம் என பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியான நடிகையாக இருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீட்ரோலில் நடித்துள்ளார். இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 3ந் தேதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கடவுளிடம் பாகுபாடு இல்லை
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா, பெண்கள் சபரிமலை கோவிலுக்கு மட்டுமில்லை, அனைத்து கோவிலுக்கும் செல்லலாம். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். ஆண் பெண் என்ற ஒரு பாகுபாடும் கடவுளுக்கு கிடையாது. எந்த கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரவேண்டும், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது என்று அதிரடியாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

கலகலப்பான பேட்டி
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கலகலப்பாக பேட்டி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தனக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை, அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அது கை நழுவி போய்விட்டது. ரஜினியின் தீவிர ரசிகை என்பதால் அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை என்றார்.

அதிகமா கோபம் வரும்
மேலும், எனக்கு கோபம் அதிகமாக வரும்,அந்த நேரத்தில் அடுத்தவர்கள் மனம் கஷ்டப்படும் அளவுக்கு பேசிவிடுவேன் இருந்தாலும், ஏன் இப்படி பேசினோம் என்று வருத்தப்படுவேன். இதனால், ஒவ்வொரு புத்தாண்டு என்றும் கோபத்தை குறைக்க வேண்டும், வாயை அடக்க வேண்டும் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்வேன் ஆனால், அதை பாலோ செய்ய மாட்டேன்.

அவர் மேல எனக்கு க்ரஷ்
எனக்கு சுஷாந்த் சிங் என்றால் ரொம்ப பிடிக்கும், அவர் நடித்த தோனி படம் பார்த்து அவர் மீது க்ரஷ் வந்து விட்டது. இந்த க்ரஷை ரகசியமாகவே வைத்திருந்தேன். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி பண்ணிட்டீயே என்னையாவது லவ் பண்ணி இருக்கலாமே என்று வருத்தப்பட்டேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications











