கிளாமர் ஃபோட்டோ சூட்டை விடுங்க! வீடியோவையே தாராளமா ரிலீஸ் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்! எல்லாம் ரசிகர்களுக்கே

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார். தனது போராட்ட குணத்தால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட இடங்களில் தனக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் அளவிற்கு உச்சத்திற்கு சென்றார் ஐஸ்வரயா ராஜேஸ். காக்கா முட்டை படத்தின் மூலம் நன்கு ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.

அதன் பின்னர் தனக்கு கிடைத்த படங்களில் குறைந்த பட்சம் தனது காதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வந்தார். விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்து கிராமங்களில் தனகான ரசிகர்களை அதிகப்படுத்தினார் என்றே கூறலாம். அதேபோல் அதிக காதாபாத்திரங்கள் நடித்திருந்த செக்கச் சிவந்த வானம் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இல்லை என்பதால் இவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை.

Aishwarya Rajesh heroine

வடசென்னை படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்து நடிப்பு ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஸ்கோர் செய்தார். தற்போது கதாநாயகிக்கு முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

திணறும் ஐஸ்வர்யா: தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார். ஆனால் சமீப காலமாக அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை. இதனால் கொஞ்சம் கிளாமர் பக்கம் இறங்கலாம் என முடிவெடுத்துவிட்டார் என கூறப்படுகின்றது.

கிளாமர் வீடியோ: அதற்கு ஏற்ற வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்படியான நிலையில், நடிகை ஐஸ்வரயா ராஜேஷ் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோ சூட்டுடன் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பலரும் லைக் செய்து எக்கசக்கமாக ஐஸ்வர்யா ராஜேஸின் அழகு குறித்து கமெண்ட் செய்தும் வருகின்றனர். இந்த போட்டோ சூர் நடத்த ஐஸ்வரயா ராஜேஷ் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

எவ்வளவு விலை: குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு க்ளோசப் ஷாட்கள் வைக்கப்பட்டது குறித்து கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் ஐஸ்வரயா ராஜேஷின் கண்கள் தன்னை கிரங்கடிப்பதாக எழுதியுள்ளார். மற்றொரு ரசிகரோ என்ன ஐஸு வர வர கிளாமர் கூடீட்டே போகுது என கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு ரசிகரோ ஐஸ்வர்யா ராஜேஷ் அணிந்திருக்கும் உடை எவ்வளவு விலை வரும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X