விபத்தில் உயிரிழந்த சகோதரர்கள்.. நிலைகுலைந்து போன குடும்பம்.. ஐஸ்வர்யா ராஜேஷின் சோகமான வாழ்க்கை!
சென்னை: தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு என்று தனி இடம் உண்டு. கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மோகன் தாஸ், தீயவர் குலை நடுங்க, கருப்பர் நகரம், அவள், துருவநட்சத்திரம் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத் தொடர்ந்து, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்ததால், காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகைக்கான விருதை அளித்துள்ளது.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் இமேஜ் கொண்ட ஐஸ்வர்யா, கிளாமரான கதாநாயகி என்பதைத் தாண்டி நடிப்புப் பாத்திரங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தார். சொந்தக் குரலில் டப்பிங் பேசியதும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உதவியது. காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தொலைக்காட்சித் துறையில் கவனிக்கப்பட்ட பிறகு, திரையுலகில் நுழைந்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என கதைகளை நிதானமாக கேட்டு நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஃபர்ஹானா படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது அதே போல மலையாளத்தில் இவர் நடித்த புளிமாடா படமும் கணிசமான வசூலை அள்ளியது.
இந்நிலையில்,கலா மாஸ்டர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர், நடன மாஸ்டர் ஆனார்கள். சிலர் சீரியல்களில் நடித்து வருகின்றனர். ஆனால், என்னால் மறக்க முடியாதது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். அவர் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பெண். ஐஸ்வர்யாவின் தாயும் தந்தையும் நடனக் கலைஞர்கள், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நான்கு உடன்பிறப்புகள், இதில் மூத்த மகன் 12 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அதன் பின் இரண்டாவது மகன் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இந்த மரணமும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தை பெரிதும் பாதித்தது. சகோதரர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் மானாட மயிலாட நிகழ்ச்சியை விட்டு ஐஸ்வர்யா வெளியேறினார், பின் மீண்டும் அடுத்த சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளரானார் என்று கலா மாஸ்டர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications