ஐஸ்வர்யா ராஜேஷின் மாடர்ன் தமிழ் பொண்ணு வெர்ஷன்.. தாறுமாறாக வர்ணித்த ரசிகர்கள்!

சென்னை : ரம்மி,தர்மதுரை ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று மிகச் சிறந்த படமாக கொண்டாடப்பட்டது.

டிரைவர் ஜமுனா, திட்டம் 2 உள்ளிட்ட நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வர , ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் ஒப்பந்தமாகியுள்ளார்.

எந்த வேடம் கொடுத்தாலும் அதை மெச்சும் அளவிற்கு செய்து முடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது மாடர்ன் தமிழ் பொண்ணு ஸ்டைலில் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை வர்ணிக்க வைத்துள்ளது.

தனி இடத்தை

தனி இடத்தை

தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகிகள் இருந்தாலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனி இடத்தை பிடித்துள்ளார். கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி சிட்டி கேர்ளாக இருந்தாலும் சரி அதை தனது இயல்பான நடிப்பின் மூலம் பாத்திரத்திற்கு மேலும் சிறப்பூட்டும் இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வர ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்திருக்க இதில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒற்றை ஆளாக முழு படத்தையும் நடிப்பால் தாங்கி நிறுத்தி இருப்பார்.

 க/பெ ரணசிங்கம்

க/பெ ரணசிங்கம்

க/பெ ரணசிங்கம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தாலும் சென்ற ஆண்டு வெளியான ஆகச்சிறந்த படமாக க/பெ ரணசிங்கம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

மாடர்ன் தமிழ் பொண்ணு

மாடர்ன் தமிழ் பொண்ணு

இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டிருக்க சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வென்ற இவருக்கு ஜே எஸ் டபிள்யூ டிஜிட்டல் என்ற பெண்களுக்கான உயரிய விருது வழங்கும் விழாவில் க/பெ ரணசிங்கம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விருது வழங்கும் விழாவிற்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் தமிழ் பொண்ணு மாதிரி வித்தியாசமான காஸ்ட்யூமில் நார்த் இண்டியன் ஸ்டைலில் போட்டிருந்த காஸ்ட்யூமில் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்க ரசிகர்களால் தாறுமாறாக வர்ணிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X