அங்கு கை வைத்து அத்துமீறினார்.. என்ன செய்தேன் தெரியுமா?.. ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்த ஷாக் தகவல்

சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன்னிடம் ஒருவர் பாலியல் சீண்டல் நிகழ்த்தியதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது நடிப்புக்கு உதாரணமாக காக்கா முட்டை படத்தை சொல்லலாம்.

Actress Aishwarya Rajeshs statement that someone sexually harassed her has created a stir

ஐஸ்வர்யாவின் துணிச்சல்: அந்தப் படம் வெளியானபோதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த புதிது. அப்படிப்பட்ட சமயத்தில் எந்த ஹீரோயினும் இரண்டு மகன்களுக்கு தாயாக நடிக்க யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை. அதனை துணிந்து செய்தார். அதன் பிறகு பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பட வாய்ப்புகள் கம்மியாகவே அவருக்கு கிடைத்தன.

வடசென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் வடசென்னை படம் முக்கியமானது. அதில் தனது நடிப்பின் மூலம் தனுஷுக்கே டஃப் கொடுத்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனையடுத்து தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் அவர் கடைசியாக ஃபர்ஹானா படத்தில் நடித்தார். அந்தப் படம் சர்ச்சைகளை தாண்டி வெளியானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

புதிய படம்: இந்தச் சூழலில் மலையாள இயக்குநர் ஏ.கே.சாஜன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு புலிமடா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கலாம் என டீசரை பார்த்த ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஐஸ்வர்யா பேட்டி: இந்நிலையில் தன்னிடம் பொதுவெளியில் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய தோழி வீட்டுக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் அருகில் நெருங்கி வந்தார்.

அங்கு கை வைத்தார்: அருகில் வந்தவர் ஒருகட்டத்தில் என் மீது அங்கு கை வைத்துவிட்டார். உடனே அதிர்ச்சியான நான் ஆட்டோவை நிறுத்த சொல்லிவிட்டு அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் என்ன அண்ணா இதுபோன்ற ஆட்களை எல்லாம் ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என கேட்டேன்.உடனே கோபமாக அந்த ஓட்டுநர் என் மீது கை வைத்த நபரை கடுமையாக திட்டிவிட்டு ஆட்டோவிலிருந்து இறக்கிவிட்டுவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X