மளமளவென உடல் எடையை குறைத்த நடிகை ஐஸ்வர்யா.. சீக்ரெட் இதுதான்!

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா, பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள். நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அதன் பின் முன்னணி நடிகையாக அனைத்து ஸ்டார் நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை அதிகரித்து காணப்பட்ட இவர், தற்போது உடல் எடையை குறைத்து சிக்குனு மாறி இருக்கிறார்.

நடிகை லட்சுமியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமான இவர், தெலுங்கு படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக நடித்தார். அதைத்தொடர்ந்து கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ராசுகுட்டி படத்தில் நடித்து பிரபலமானார். மில் தொழிலாளி, தையல்காரர், உள்ளே வெளியே, காசி, பஞ்சதந்திரம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஆறு, பரமசிவம், பிரியசகி, பழனி, அபியும் நானும் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இதில் சூர்யா நடித்த ஆறு படத்தில் சவுண்டு சரோஜா கதாபாத்திரம் இவருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடிகையாக நடித்து இருக்கிறார். சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த பிறகு இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் நடித்தார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா பங்கேற்றார்.

aishwarya tips

ஐஸ்வர்யா: சமீபத்தில் ஐஸ்வர்யா அளித்த பேட்டியில், நான் இப்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். வருமானம் இல்லாமல் இருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும் என்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லாததால் வீடு வீடாக சென்று சோப்பு விற்றுக் கொண்டு இருக்கின்றேன் என்றார். நான் பார்க்கும் வேலை எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பலரும் என்னிடம் நலம் விசாரிப்பது சந்தோசமாக இருக்கு. எனக்கு பணம் தேவை இல்லை. என் பொருளை வாங்கினால் போதும். இப்போது எனக்கு கடன் இல்லை. வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், வேலை மட்டுமே இல்லை. நான் இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்பட்டதில்லை, பெருமைப்படுகிறேன் என்று பேசி இருந்தார்.

டிப்ஸ்: ஐஸ்வர்யா தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், சமையல் செய்வது மற்றும் சில டிப்ஸ்களையும் கொடுத்து வருகிறார். அதில், உடல் எடை குறைத்தது குறித்து பேசி இருக்கிறார். அதில், நான் 2018ம் ஆண்டு 90 கிலோவாக இருந்தேன். இதனால், உணவு முறையில் மாற்றம் செய்தேன். உடல் எடை அதிகரித்ததால் அசைவ உணவை தவிர்த்துவிட்டு, தாவரம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். அதன்பிறகு உடலில் நல்ல மாற்றங்கள் வந்ததை நான் உணர்ந்தேன். மேலும், பால் பொருட்கள், ஆராக்கியமற்ற உணவுகளை மொத்தமாக தவிர்த்துவிட்டேன். உணவில் மாற்றம் கொண்டு வந்த பின் யோகா பயிற்சியை தொடங்கினேன். யோகாவை முறையாக கற்றால் மீண்டும் எடை ஏறுவதற்கு வாய்ப்பே இல்லை, நீங்கள் நினைத்தாலும் எடை ஏற விடாது. யோகா குருவிடம் சென்று யோகா கற்க ஆரம்பியுங்கள். யூடியூப் வீடியோ, புத்தகத்தை பார்த்து யோகா செய்யாதீர்கள் முறையாக யோகா குருவிடம் சென்று யோகாவை கற்றுக்கொள்ளுங்கள் என்று ஐஸ்வர்யா உடல் எடை குறைத்தது குறித்து கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X