அம்மா அமைப்பு தனக்கு உதவியாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை.. ஐஸ்வர்யா லெக்ஷ்மி பளீர்!

திருவனந்தபுரம்: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். மாடலிங்கிலிருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர் ஒரு மருத்துவர். தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமா மீது இருந்த ஆசையால் நடிகையாக மாறியுள்ளார்.

நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும மாஸ் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டரில் நடித்து தன்னுடைய வசீகரமான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை சுண்டியிழுத்தார். தற்போது கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகவும் முக்கியமான தருணங்களை கொடுத்துவரும் நிலையில் அமமா அமைப்பு தனக்கு உதவிகரமாக இருக்காது என்பதால் அதில் சேரவில்லை என்று கூறியுள்ளார்.

aiswarya lekshmi amma hema committee report

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மாடலிங் மூலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றவர் ஐஸ்வர்யா. இவர் ஒரு மருத்துவர் என்ற நிலையிலும் சினிமாவில் இருந்த விருப்பம் காரணமாக இவர் மருத்துவராக பிராக்டீஸ் செய்யாமல் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் தமிழில் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.

ஹேமா கமிட்டி அறிக்கை: தற்போது கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஹேமா கமிட்டி உறுதி செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் குரல்கொடுத்து வருகின்றனர். கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பிலிருந்து அதன் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 நடிகர்கள் விலகியுள்ளனர். இந்த சம்பவத்தில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டவர்கள் குரல் கொடுக்கவில்லை என்று முன்னதாக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தநிலையில், இந்த ராஜினாமாவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா லெக்ஷ்மி குற்றச்சாட்டு: இந்நிலையில் கேரள அம்மா அமைப்பு தனக்கு உதவிகரமாக இருக்காது என்பதால் தான் அதில் சேரவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தெரிவித்துள்ளார். மேலும் அம்மா அமைப்பின் நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதால் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதில் இருந்து நழுவியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். திரைத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் அம்மா அமைப்பில் பதவிக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல அந்த அமைப்பில் உயர்பதவிகளில் பெண்கள் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதவி விலகல் குறித்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி: ஹேமா கமிட்டி அறிக்கை பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் எதிரொலியாக அம்மா அமைப்பின் தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் ஒட்டுமொத்தமாக அதிலிருந்து பதவி விலகியுள்ளனர். பிரச்சினையை எதிர்கொண்டு, அதற்கு விளக்கமளிக்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் இந்த முடிவும் கேரள திரையுலகில் அதிகப்படியான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் இந்த விவகாரத்தில் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X