தொடர்ந்து ரொமான்ஸ் பக்கங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.. சும்மா தெறிக்குதே!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷமி அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து வருகிறார். மருத்துவரான இவர், நடிகையாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் ஆக்ஷன், ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா லெக்ஷமி.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தற்போது அவரது இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தக் லைஃப் படத்திலும் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பில் முன்னதாக ஆக்ஷன், ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் மற்றும் அதன் இரண்டாவது பாகம் ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. இதில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய வரவேற்பை ஐஸ்வர்யா லெக்ஷ்மிக்கு பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து தற்போது மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.
ரொமான்ஸ் வீடியோக்கள்: தன்னுடைய சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் படங்களின் காட்சிகளையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் அதிக கவர்ச்சியுடன் காணப்படும் படக்காட்சிகளையும் பகிர்ந்து வருகிறார். இதில் லிப் லாக் காட்சிகளும் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. கட்டா குஸ்தி படத்தின் படுக்கையறை காட்சிகளையும் குளியலறை காட்சிகளையும் ஐஸ்வர்யா லெக்ஷமி பகிர்ந்துள்ளார்.
வெறுப்பேற்றிய ரசிகர்கள்: தன்னுடைய ஓய்வு நேரங்களில் தனது ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் ஐஸ்வர்யா லெக்ஷமி. இதையடுத்து தன்னை பார்க்கும் அனைவரும் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று ஒரே கேள்வியையே கேட்பதாகவும் பெறுப்புடன் பதிலளித்துள்ளார். தான் தற்போதும் சிங்கிளாகவே இருப்பதாகவும் யாரையும் தன்னுடன் ஜோடி சேர்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக அவருடன் இணைந்து நடித்த அர்ஜுன் தாசை இணைத்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில், தாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே என்று அவர் கூறியிருந்தார்.
தக் லைஃப் படம்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் அடுத்தடுத்து அழுத்தமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. பொன்னியின் செல்வன் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த பூங்குழலி கேரக்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. கார்கி படத்திலும் இவரது கேரக்டர் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதனிடையே அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள தக் லைஃப் படத்தினை அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











