வளையம் பட சூட்டிங் நிறைவு.. பிரியாணி விருந்து கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. இது என்ன புது ட்ரெண்ட்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி படத்தில் சிறிய கேரக்டர்மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். தொடர்ந்து இவரை காக்கா முட்டை படம் அடுத்த களத்தில் கொண்டு சென்றது. அழுத்தமான கதைகலங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள வளையம் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தில் தேவ் என்பவர் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும் அறிமுக இயக்குநர் மனோபாரதி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள சூழலில் பட குழுவினருக்கு பிரியாணி ட்ரீட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக கன்னட சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் படத்தில் இவர் களமிறங்கியுள்ளார். படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க கமிட்டாகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ள இந்த படத்தில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளை தேர்வு செய்ததாகவும் இதையடுத்து பாவனா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளையம் படம்: தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் அடுத்ததாக வளையம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனோபாரதி இயக்கியுள்ள சூழலில் ஹீரோவாக தேவ் அறிமுகமாகிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டல்லி பாபு தயாரித்துள்ள இந்த படத்தில் சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பெரேடி. சுரேஷ் மேனன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் படமான இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரியாணி விருந்து: இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த சூழலில் தற்போது பட குழுவினருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பிரியாணி விருந்து வைத்துள்ளார். தன்னுடைய படக்குழுவினருக்கு தன் கையாலேயே அவர் பிரியாணியை பரிமாறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் சூட்டிங்கை நிறைவு செய்த அமரன் டீமிற்கு பிரியாணி விருந்து கொடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், அதே பாணியில் பிரியாணி விருந்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் ரிலீஸ்: பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தின் மூலம் அவர் சிறப்பு கவனத்தைப் பெற்ற நிலையில் அதை தொடர்ந்து காக்கா முட்டை படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்த கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது வளையம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











