Aiswarya Rajesh: வைர நகைகள் வாங்குறதுல எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன்!
புதுச்சேரி: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து காக்கா முட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றவர்.
இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் கவர்ச்சி ரூட்டிற்கு மாறி அடுத்தடுத்த போட்டோ சூட்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஏராளமான ரசிகர்களையும் லைக்ஸ்களையும் அள்ளி வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி படம் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து காக்கா முட்டை உள்ளிட்ட அழுத்தமான கதைக்களங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, தன்னுடைய ரூட்டை கவர்ச்சிக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

ஜுவல்லரி கடை திறப்பு விழா: மிகவும் ஹோம்லியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த மாற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட்களை எடுத்து அதை பதிவிட்டு ஏராளமான லைக்ஸ்களையும் பாலோயர்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில் புதுச்சேரியில் ஃபேதா என்ற சில்வர் ஜுவல்லரி ஷாப்பின் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கலான உடையில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்திருந்தார். அழகான சில்வர் ஜுவல்லரியை அணிந்துக்கொண்டு மாஸ் காட்டினார்.

வைர நகைகளில் ஆர்வம் இல்லை: நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த ஜுவல்லரி சில்வர் என்று தான் நினைக்கவில்லை என்றும் டைமண்ட் போலவே காட்சியளிப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே தனக்கு டைமண்ட் நகைகளில் இன்வஸ்ட் செய்வதில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை என்று கூறியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அதிகமாக விலை இருப்பதால் ஒன்று, இரண்டு நகைகளை மட்டுமே வாங்க முடியும் என்பதால் தான் இந்த முடிவில் இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சில்வர் ஜுவல்லரி என்பதால் அதிகமான நகைகளை நமது விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி அணிந்துக் கொள்ளலாம் என்றும் விலை அதிகமாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

போட்டோஷுட் புகைப்படங்கள்: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தன்னுடைய உடை மற்றும் அலங்காரத்தில் சிறப்பாக காணப்படுகிறார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் எடுத்த போட்டோஷுட் புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











