கவர்ச்சி தூக்கலாக போஸ்.. ரூட்டை மாற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய துவக்ககால படத்திலேயே வயதுக்கு மீறிய பாத்திரத்தை ஏற்று இரண்டு குழந்தைகளின் தாயாக, குடிசைப்பகுதியில் வசிக்கும் பெண்ணாக இயல்பாக எளிய உடையில் நடித்து அதிரடி கிளப்பியவர்.

தொடர்ந்து கிராமத்து பெண் மற்றும் சவால் நிறைந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது டிரைவர் ஜமுனா உள்ளிட்ட பெண்களை மையப்படுத்தும் கதைகளிலும் நடித்து வருகிறார்.

 நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட்டின் சிறப்பான நாயகிகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். மற்ற மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவரது நடிப்பில் படங்கள் வெளியானவண்ணம் உள்ளது. தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட 6 படங்களில் அவர் நடித்து வருகிறார்.

ரிலீசுக்கு தயாராகும் அடுத்தடுத்த படங்கள்

ரிலீசுக்கு தயாராகும் அடுத்தடுத்த படங்கள்

இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பம் முதலே கதைகளில் அதிக கவனம் செலுத்தி அத்தகைய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கிளாமர் காட்டுவதில் எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. அந்த வகையில் இவரது பல படங்கள் கதைகளுக்காகவே இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தன.

 கவர்ச்சிப்பகுதியில் ஒதுங்கிய புயல்

கவர்ச்சிப்பகுதியில் ஒதுங்கிய புயல்

இந்நிலையில் இந்தப் புயல் தற்போது கவர்ச்சிப்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. தன்னுடைய படங்களிலும் வித்தியாசம் காட்டத் துவங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சி தூக்கலாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்கள்

கவர்ச்சி புகைப்படங்கள்

தற்போது இவர் குட்டியான ஸ்கர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கவர்ச்சி சற்று அதிகமாகத்தான் காணப்படுகிறது. ஹோம்லியாக நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் இந்த புகைப்படங்களில் அவர் காணப்படுகிறார்.

கவர்ச்சிப்பாதையில் ஐஸ்வர்யா

கவர்ச்சிப்பாதையில் ஐஸ்வர்யா

படவாய்ப்புகளை பெறுவதற்காக நடிகைகள், தங்களது சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. இந்த வழிமுறை அவர்களுக்கு கைக்கொடுக்கவும் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷும் இறங்கியுள்ளார்.

பொருத்தமான கிளாமர்

பொருத்தமான கிளாமர்

இந்த செயல்பாடு அவருக்கு கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆயினும் இந்த கவர்ச்சிப் புகைப்படங்கள் ஐஸ்வர்யாவிற்கு பொருந்தித்தான் உள்ளது. குடும்பப் படங்களில் நடிக்கும் சில ஹீரோயின்களுக்கு இத்தகைய கிளாமர் கெட்டப் பொருத்தமாக இருக்காது. அந்த வகையில் ஐஸ்வர்யா இந்த புகைப்படங்களில் சிறப்பாகவே ஸ்கோர் செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X