கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. வைரலாகும் 'ஸ்டைலிஷ் தமிழச்சி'யின் செம ஸ்டைல் போட்டோஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
லாக்டவுனுக்குப் பிறகு நடிகைகள் அதிகமாக தங்கள் நேரங்களை செலவிடுவது சமூகவலைதளங்களில்தான்.
தங்கள் புகைப்படங்கள், ஒர்க் அவுட் வீடியோ உள்பட பலவற்றை அதில் பதிவு செய்து வருகின்றனர்.

போட்டோஷூட்
சிலர் பிகினி உள்பட கிளாமர் ஸ்டில்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் பதிவு செய்வதற்காகவே பல நடிகைகள், வெளிநாட்டு பீச்-களில் ஹாட் போட்டோஷூட்டையும் நடத்தி வருகின்றனர். அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். இந்த போட்டோக்களை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடிகை அக்ஷரா கவுடா
லைக்ஸ்களையும் கமென்ட்களையும் அள்ளித் தெளிக்கின்றன. அதை ரசிக்கின்ற நடிகைகள் தொடர்ந்து இதுபோன்ற புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின்களில், நடிகை அக்ஷரா கவுடாவும் ஒருவர். அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அஜித்தின் ஆரம்பம்
இவர், பாடலாசிரியர் சினேகன் ஹீரோவாக நடித்த 'உயர் திரு 420' மூலம் தமிழில் அறிமுகமானவர். விஜய்யின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்குலி கதவ தொர போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அஜித்தின் ஆரம்பம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ஸ்டைலிஷ் தமிழச்சி
இதில் இவர் பங்கேற்ற 'ஸ்டைலிஷ் தமிழச்சி' பாடல் மூலம் இவர் அதிக பிரபலம் அடைந்தார். லாக்டவுனுக்கு முன்பு அவர் கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பணகை படத்தில் நடித்து வந்தார். கன்னடம் மற்றும் தமிழில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அவர், சமீபத்தில் தனது புதிய ஸ்டில்களை இன்ஸ்டாவின் பதிவிட்டுள்ளார்.

ஜாலிகேலி கமென்ட்ஸ்
இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக, நான் தேவதைகளுக்கு அருகில் இருக்கலாம். ஆனால் அவர்களில் ஒருவரென நினைத்து விட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதற்கு பலர் ஜாலி கேலி கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

ஹாட்டா இருக்கீங்க
நீங்க நிஜமாகவே ஸ்டைலிஷ் தமிழச்சிதான் என்று சில நெட்டிசன்ஸ் கூறியுள்ளர். சிலர், அவர் அழகை வர்ணித்துள்ளனர். இந்த போட்டோஸ்ல செம ஹாட்டா இருக்கீங்க என்றும் இதே போல இன்னும் நிறைய போட்டோ பதிவு பண்ணுங்க என்று சில ரசிகர்களும், கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











