சீமானுடன் இருக்கும் புகைப்படத்துக்கு மோசமான கமெண்ட்.. செருப்பு பிஞ்சிடும் டா நாயே என மிரட்டி விட்ட நடிகை

சென்னை: இணையம் எப்போதும் பரபரப்பாகத்தான் இருந்து வருகிறது. அதிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த தகவல்கள் என்றால் மொத்த இணையமும் அலாரம் வைத்து அலர்ட்டாக இருக்கும் நிலை இன்றைக்கு உள்ளது. அதற்கு காரணம், நடிகை விஜயலட்சுமி விவகாரம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் இணையவாசி ஒருவர் மோசமான கேப்ஷன் உடன் சீமானோடு நடிகை அலிஷா அப்துல்லா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததற்கு, நடிகை அலிஷா அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் தளத்திலும் திரைத்துறையிலும் ஒருசேர கவனம் செலுத்தி வந்தவர் இயக்குநர் சீமான். படங்களை இயக்குவது மட்டும் இல்லாமல், படங்களில் நடிக்கவும் செய்தவர். முழுநேர அரசியலில் கவனம் செலுத்திய பின்னர், படங்கள் இயக்குவதில்லை. ஆனாலும், வெகு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது, சீமான் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி நிறைவடைந்தது.

Actress Alisha abdullah Slams Netizen Who Badly Comment With Seeman Photo

சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல வழக்குகள் இருந்தாலும், அதில் மிகவும் கவனம் பெறும் வழக்காக இருப்பது, நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்த வழக்குதான். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என சீமான் தரப்பில் இருந்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி முதன் முதலாக வழக்கு தொடுத்த போது, அதை பொய் குற்றச்சாட்டுகள் என மறுத்தவர் சீமான்.

நடிகை விஜயலட்சுமி: ஆனால் சில மாதங்களுக்கு முன்னர், நடிகை விஜயலட்சுமியை மிகவும் மோசமாக விமர்சித்து பேட்டி அளித்தார். அதில், "நான் ஏதோ வயது வந்த புள்ளையை வலுக்கட்டாயமாக கடத்தி கொண்டுபோய் சோளக்காட்டில் வைத்து கற்பழித்தைப்போல் பேசிக்கொண்டு இருக்குறீர்கள்? அவர்களாகவே வந்து என்னுடன் விரும்பி உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கிக் கொண்டு போனவர்" என பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடக்கத்தில் பொய் குற்றச்சாட்டுகள் எனக் கூறிய சீமான், அதன் பின்னர் விரும்பி வந்து உறவு வைத்துக் கொண்டார் என பேசியது பரபரப்பாக பேசப்பட்டது.

Actress Alisha abdullah Slams Netizen Who Badly Comment With Seeman Photo

சீமானுடன்: ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரம் என்றால், இணைய வாசிகளும் சீமானைப் பிடிக்காதவர்களும், சீமானுக்கு எதிராக பல பதிவுகளை பகிர்வதும் அவற்றை டிரெண்ட் ஆக்குவதும் வாடிக்கையான விஷயம். இப்படியான நிலையில் இணைய வாசி ஒருவர், துணை நடிகை ஆலிசா அப்துல்லா, சீமானுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் எடுத்த அந்த புகைப்படத்துக்கு இணைய வாசி, நடிகை விஜயலட்சுமி மாதிரி புகார்கள் வராமல் இருந்தால் சரி என கேப்ஷன் இட்டுள்ளார்.

Actress Alisha abdullah Slams Netizen Who Badly Comment With Seeman Photo

செருப்படி: அந்த இணைய வாசியின் பதிவுக்கு துணை நடிகை அலிஷா அப்துல்லா மிகவும் கடுமையான கமெண்ட்டை பதிவிட்டுள்ளார். அதாவது, செருப்பு பிஞ்சிடும் டா நாயே என பதிவிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவியும் வருகிறது. அலிசா அப்துல்லா அடிப்படையில் கார் மற்றும் பைக் ரேஸ் சாம்பியன். சில தினங்களுக்கு முன்னர் கூட மணிக்கு 278 கிலோ மீட்டார் வேகத்தில் கார் ஓட்டிய வீடியோவை பகிர்ந்திருந்தார். இவர் இரும்புக் குதிரை படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X