»   »  கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ

கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹரித்வார்: பாலிவுட் நடிகை அலிஷா கான் தன்னை ஏமாற்றிய கணவரின் வீட்டிற்கு சென்று கதவுகளை உடைத்து ரகளை செய்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தை சேர்ந்தவர் அலிஷா கான். பாலிவுட் நடிகை. கையில் படம் இல்லாததால் பணம் இல்லாமல்அல்லாடுகிறார். அவரின் முன்னாள் காதலர் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதால் அலிஷாவை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

இதனால் தெருவோரம் வசித்து வந்த அவர் திடீர் என்று தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான அலிஷாவை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் அலிஷா ஹரித்வாரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்று கதவுகளை உடைத்து ரகளை செய்துள்ளார். அழைப்பு மணியை அழுத்தியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கதவை உடைத்தார்.

அவர் ரகளை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Bollwood actress Alisha Khan created ruckus at her husband's house in Haridwar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil