உண்மையிலேயே கனவு படம்.. 'கணம்' படம் குறித்து மனம் திறந்த நடிகை அமலா!

சென்னை: நடிகை அமலா 30 ஆண்டுகளுக்கு பிறகு தான் நடித்து வரும் திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.

மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை அமலா. 1980 மற்றும் 90களில் தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

1992ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலா.

மனம் படத்தில் கவுரவத் தோற்றம்

மனம் படத்தில் கவுரவத் தோற்றம்

தமிழில் டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல், பிரபு, மோகன் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார் அமலா. திருமணத்திற்கு பிறகு படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்த நடிகை அமலா, கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான மனம் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு

30 ஆண்டுகளுக்கு பிறகு

இந்தப் படத்தில் முழுக்க முழுக்க நாகார்ஜூனாவின் குடும்பத்தினரே நடித்திருந்தனர். தமிழில் கடைசியாக 1991ஆம் ஆண்டு வெளியான கற்பூர பொம்மை படத்தில் நடித்திருந்தார் அமலா. அதன்பிறகு 30 ஆண்டுகள் கழித்து தற்போது கணம் என்ற படத்தில் நடித்து வருகிறார் அமலா. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் அண்மையில் வெளியானது.

 அமலா அக்கினேனி ட்வீ ட்

அமலா அக்கினேனி ட்வீ ட்

இந்த படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இவரும் கடைசியாக 2015-ல் வெளியான ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் இப்படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அமலா அக்கினேனி.

உண்மையிலேயே இது கனவு படம்

உண்மையிலேயே இது கனவு படம்

அதாவது, நாம் கணம் படத்திற்காக காத்திருக்கும் வேளையில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. உண்மையிலேயே இது கனவு படம் என குறிப்பிட்டுள்ளார் நடிகை அமலா. இந்த படம் தெலுங்கு மொழியிலும் ரிலீஸ் ஆகிறது.

Recommended Video

Kollywood Actress Meaningful Tattoos | Varalakshmi, Varsha, Vanitha, Samantha
ஸ்ட்ராங்கான கதாப்பாத்திரம்

ஸ்ட்ராங்கான கதாப்பாத்திரம்

ஸ்ரீகார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். ரித்து வர்மா, நாசர், சதீஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் அமலா அக்கினேனிக்கு ஸ்ட்ராங்கான கதாப்பாத்திரம் இருக்கும் என்று தெரிகிறது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X