Amala Paul: இரண்டே மாதத்தில் அமலா பால் கர்ப்பம்... வெளியான கலர்ஃபுல் போட்டோஸ்... ஏய் எப்புட்றா!

சென்னை: நடிகை அமலா பால் கடந்த நவம்பர் மாதம் தனது நண்பர் ஜகத் தேசாய்யை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். முன்னதாக இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார் அமலா பால். இந்நிலையில், நவம்பர் மாதம் திருமணம் செய்த அமலா பால், இரண்டே மாதங்களில் தான் கர்ப்பம் ஆகியுள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அம்மாவாக போகும் அமலா பால்: மலையாளத்தில் 'நீலத்தாமரா' என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து அதிரடி காட்டியிருந்தார். இப்போதும் அமலா பால் என்றாலே சிந்து சமவெளி படம் தான் ரசிகர்களின் நினைவில் வரும். பின்னர் மைனா திரைப்படம் மூலம் பிரபலமான அமலா பால், கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

Actress Amala Paul announced her pregnancy on her Instagram

விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை, சூர்யாவுடன் பசங்க 2 என கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அமலா பால், இயக்குநர் எ.ஏல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அமலா பால் - ஏ.எல் விஜய் தம்பதி 2017ல் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தது.

இதனையடுத்து கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்த அமலா பால், நவம்பர் மாதம் தனது நண்பர் ஜகத் தேசாய்யை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அமலா பாலின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதனைத் தொடர்ந்து இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில், அமலா பால் தான் கர்ப்பம் ஆகியுள்ளதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Actress Amala Paul announced her pregnancy on her Instagram

அமலா பாலும் அவரது கணவர் ஜகத் தேசாயும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதனை பார்த்த ராசிகர்கள் அமலா பாலுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளனர். அதேநேரம் திருமணம் ஆன இரண்டே மாதங்களில் எப்படி கர்ப்பம் ஆனார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக அமலா பாலின் பிறந்தநாளில் தான் அவரது நண்பர் ஜகத் தேசாய் காதலை தெரிவித்திருந்தார்.

Actress Amala Paul announced her pregnancy on her Instagram

அப்போது நண்பர் ஜகத் தேசாய்யின் காதலை வியப்பாக பார்த்தார் அமலா பால். ஆனால், அதற்கு முன்பாகவே இருவரும் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தார்களா என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X