Actress Amala paul: வளைகாப்பு நிகழ்ச்சி.. கணவருடன் அமலா பால் கலர்புல் காம்பினேஷன்!

சென்னை: நடிகை அமலா பால் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.

தமிழில் தன்னுடைய முதல் படமான சிந்த சமவெளி படம் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமலா பால் தொடர்ந்து மைனா படம் மூலம் ரசிகர்களை கொள்ளைக் கொண்டார்.

 Actress Amala paul attends her friends baby shower function with her husband

இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்துக் கொண்ட இவர் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது மீண்டும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

நடிகை அமலா பால்: நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் கமிட்டாகி நடித்தவர். தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள அமலா பால், சமீபத்தில் தயாரிப்பிலும் ஈடுபட்டார். முன்னதாக இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சில ஆண்டுகள் இவர்களது திருமண உறவு நீடித்த நிலையில் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்தாகியுள்ளது.

 Actress Amala paul attends her friends baby shower function with her husband

இரண்டாவது திருமணம்: தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் சில படங்களிலும் வெப் தொடர்களிலும் இவர் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். தங்களின் திருமணக் கொண்டாட்டங்களையும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய காதல் கணவருடன் தன்னுடைய தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

தோழிக்கு வளைகாப்பு: தன்னுடைய தோழிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள அமலா பால், அவருடன் எடுத்துக் கொண்ட கலர்புல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களையும் அள்ளியுள்ளது. தங்களின் நட்பு 10 ஆண்டுகளை கடந்து சிறப்பாக சென்று வருவதையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் ஜகத் தேசாயை திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொச்சியில் திருமணம்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடினார் அமலா பால். அந்த நேரத்தில் அவரது நெருங்கிய நண்பர் ஜகத் தேசாய், அவருக்கு பிரபோஸ் செய்தார். இந்தக் காதலை எதிர்பார்க்காத அமலா பால், நண்பரின் காதலுக்கு ஒப்புதல் தெரிவித்ததை பார்க்க முடிந்தது. இதனை வீடியோவாக வெளியிட்டிருந்தார் அமலா பால். இதனிடையே இவர்கள் இருவருக்கும் கொச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கொண்டாட்ட வீடியோக்கள்: இதன் கொண்டாட்டங்களைத்தான் தற்போது அமலா பால் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள அமலா பால், தயாரிப்பிலும் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவாக இருந்தாலும் தற்போது கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் அமலா பால், விரைவில் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X