அழகு! ஆண் குழந்தையை பெற்றெடுத்த அமலா பால்.. வாழ்த்து, அறிவுரை என பிரபலங்கள் முதல் நெட்டிசன்ஸ் வரை
சென்னை: சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமலா பால். தனது முதல் படத்திலேயே சவாலான கதாபாத்திரத்தில் நடித்து பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். அதன் பின்னர் மைனா படத்தில் இவரது நடிப்பும் அதனை ஒட்டுமொத்த தமிழ் திரை உலகமும் கொண்டாடும் அளவிற்கான டி.இமானின் இசையும் அமலா பாலின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது. மைனா படத்தின் வெற்றி அமலா பாலை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதையடுத்து தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்தார்.
தளபதி விஜயுடன் தலைவா படத்தில் நடித்ததன் மூலம், அப்படத்தின் இயக்குநர் விஜயுடன் காதல் ஏற்படவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒருகட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்தனர். விவாகரத்திற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் கனிசமான படங்களில் மட்டும் நடித்து வந்த அமலா பால் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார்.

மாஸ் கம்பேக்: அவ்வப்போது தமிழில் படங்கள் நடித்து வந்தாலும் ஆடை படத்தில் உடம்பில் துணி இல்லாமல் நடித்து மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் பலரும் இவரது நடிப்பை பாராட்டினர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இவர் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தனது காதலர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார்.

லவ்லி ஜோடி: திருமணத்திற்கு முன்னர் இருந்தே இருவரும் காதலைப் பகிர்ந்து கொண்ட வீடியோக்கள் புகைப்படங்களையும் அவுட்டிங் செல்லும்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் பகிர்ந்து வந்தார். இவர்களது அவுட்டிங் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பட்டாளமே உருவாகும் அளவிற்கு க்யூட்டான புகைப்படங்களை அமலா பால் பகிர்ந்து வந்தார். திருமணத்திற்குப் பின்னர் இவர்களது காதல் போஸ்ட்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது என நெட்டிசன்கள் கொஞ்சம் ரசனையோடு புலம்பும் அளவிற்கு அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை நிரப்பிக் கொண்டு இருந்தார். ஒருபுறம் அமலா பாலைப் பார்த்து கடுப்பாகும் ரசிகர்கள் இருந்தாலும் மறுபுறம் அமலா பால் தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆண் குழந்தை: இந்நிலையில் அமலா பால் மற்றும் ஜெகத் தேசாய் தம்பதியினர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். கர்ப்பகாலத்தில் அமலா பால் எடுத்த புகைப்படங்களுக்கு பல லட்சங்களில் லைக்குகளும் வாழ்த்துகளும் குவிந்தது. இந்நிலையில் அமலா பாலுக்கு கடந்த 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்த தகவல்கள் வெளியானதும் பிரபலங்கள் தொடங்கி அவரது ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர். மேலும் தங்களது குழந்தைக்கு இலை என அமலா பாலா மற்றும் ஜெகத் தேசாய் தம்பதியினர் பெயரிட்டுள்ளனர். மேலும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

வாழ்த்துகள்: இந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் மலையாள சினிமாவில் அதிகம் நடித்து வரும் நடிகை பேர்லே மானே அமலா பாலுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதேபோல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற கருடன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த ஷிவாதாவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதேபோல் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் குழந்தைக்கு பிளாஸ்டிக் ஒத்துக்காது எனவே கவனமாக இருங்க எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











