திருமண வேலைகளில் படு பிஸியான அமலா பால்.. வீட்டில் சீக்கிரமே கெட்டி மேளம்.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: வீட்டில் விரைவில் விசேஷம் நடைபெற உள்ள நிலையில் நடிகை அமலா பால் திருமண வேலைகளில் படு பிஸியாக உள்ளார்.

மாலையான நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள் , வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும் விஜய்யுடன் தலைவா, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, சூர்யாவுடன் பசங்க 2, உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

ஏஎல் விஜய்யுடன் திருமணம் செட்டில்

ஏஎல் விஜய்யுடன் திருமணம் செட்டில்

ஏஎல் விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பீக்கில் இருக்கும் போதே இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலா பால

விவகாரத்து - மீண்டும் நடிப்பு

விவகாரத்து - மீண்டும் நடிப்பு

பின்னர் மீண்டும் நடிக்க விரும்பிய அமலா பால் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் அமலா பால். ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்தார் அமலா பால். இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படம்

குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படம்

அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. அவர் ஏற்கனவே நடித்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்யக் கூட ஆள் இல்லாமல் கிடப்பில் உள்ளது அந்தப் படம். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்தார்.

ஏகத்துக்கும் கவர்ச்சி - போட்டோ ஷூட்

ஏகத்துக்கும் கவர்ச்சி - போட்டோ ஷூட்

தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமலா பால், கடைசியாக குடி எடமாயித்தே என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்தார். இதில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் அமலா பால். அந்த வெப் சீரிஸும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!
அடிக்கடி அரைகுறை உடையில்

அடிக்கடி அரைகுறை உடையில்

நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ளார். மீண்டும் பழையப்படி சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதற்காகவே ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி வருகிறார். அடிக்கடி அரைகுறை உடையில் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி திணறடித்து வருகிறார்.

விரைவில் கெட்டி மேள சத்தம்

விரைவில் கெட்டி மேள சத்தம்

இந்நிலையில், நடிகை அமலா பால் வீட்டில் விரைவில் கெட்டி மேள சத்தம் கொட்டப்போகிறது. அதவாது நடிகை அமலா பாலின் தம்பி அபிஜித்திற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதனால் நடிகை அமலா பால், தனது தம்பியின் திருமண வேலைகளில் படு பிஸியாக உள்ளார்.

தம்பிக்கு கல்யாணம்

தம்பிக்கு கல்யாணம்

அண்மையில் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகை அமலா பால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை அமலா பால் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த போட்டோக்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X