Actress Amala paul: காதல் கணவருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. அமலா பால் கியூட் போட்டோஸ்!
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து அமலா பால் நடித்துள்ளார். தமிழில் மைனா படம் மூலம் மிகுதியான கவனத்தை பெற்ற இவர், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான சிந்து சமவெளி படமும் அதிரடியாக அமைந்தது. இவரது நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள், தலைவா படங்கள் இவரது கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன.
தொடர்ந்து இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்துக் கொண்ட அமலாபால், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவர்களது உறவு சில ஆண்டுகளிலேயே முறிந்தது. மனக்கசப்பு காரணமாக இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அமலாபால், தற்போது கோவாவை சேர்ந்த ஜகத் தேசாய் என்பவரை மறுமணம் செய்துள்ளார். தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அமலா பால். ஜகத் தேசாய், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை அமலா பால்: நடிகை அமலா பால் -ஜகத் தேசாய் இருவரும் கடந்த நவம்பர் 5ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் திருமணம் செய்துக் கொண்டனர். முன்னதாக, அமலா பாலுக்கு ஜகத் தேசாய் காதலை சொன்ன தருணங்களையும் அமலா பால் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். கடந்த அக்டோபர் மாதத்தில் அமலா பாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஜகத் தேசாய் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதையடடுத்து காதல் கணவருடன் ஹனிமூன் சென்ற அமலா பால், அவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டு ரசகர்களை அதிர்ச்சி கொடுத்தார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ஜகத் தேசாயுடன் அடுத்தடுத்த கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால். இதனால் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடரும் பாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் 5.2 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் அமலா பால். இந்நிலையில் சமீபத்தில் தோழியின் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தன்னுடைய கணவருடன் பங்கேற்று அதன் புகைப்படங்கள், வீடியோக்களை கலர்புல்லாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் கிறிஸ்துமசை இந்த ஜோடி கலக்கலாக கொண்டாடியுள்ளது.
ரசிகர்கள் வாழ்த்து: இதையொட்டி கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கலக்கலான புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அமலா பால். இந்தப் புகைப்படங்களில் இருவரும் மிகவும் கேஷுவலாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுகின்றனர். இதையடுத்து அமலா பாலுக்கு ரசிகர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடும் வழக்கத்தை கொண்டவர் அமலா பால். இந்த ஆண்டு இவரது திருமணம் முடிந்து முதல் கிறிஸ்துமஸ் வந்துள்ள நிலையில் அவரது கொண்டாட்டம் பன்மடங்காகியுள்ளது-
முத்தத்தை பகிர்ந்த கணவர்: மலையாள கிறிஸ்துவரான அமலா பால், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமசை மிகம் விமரிசையாக கொண்டாடுபவர். தன்னுடைய அம்மாவுடன் ஆண்டுதோறும் கொண்டாடும் அமலா பால் கொண்டாட்டத்தில் இந்த ஆண்டு அவரது கணவர் ஜகத் தேசாயும் கலந்துக் கொண்டுள்ளார். இதையொட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இதில் இருவரும் மிகவும் அன்னியோன்னியமாக காணப்படுகின்றனர். தன்னுடைய காதல் மனைவிக்கு முத்தம் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை தேசாய் பகிர்ந்துள்ளதை இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











