என்ன மேம்.. போட்டா ஃபுல்லா போடுறீங்க.. இல்ல போடவே மாட்றீங்க.. இதான் வச்சா குடுமி.. அடிச்சா மொட்டையா!
சென்னை: நடிகை அமலா பாலின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு அதிகம் விமர்சனத்துக்கு உள்ளானவர்களில் முக்கியமானவர் அமலாபால். காரணம் அவர் நடித்த ஆடை படம் தான்.
ஆடை படத்தில் நடிகை அமலா பால், உடம்பில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக நடித்திருந்தார். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை அவர் துணிந்து செய்தார்.

விமர்சனம்
இதனால் திரைத்துறையை சேர்ந்த பலர் அவரை பாராட்டினார்கள். அதே நேரத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததை பலரும் விமர்சித்தனர்.

ஹார்டுவொர்க்
ஆனால் ஆடை படம் ரிலீஸான பிறகு அவர் மீதான விமர்சனங்கள் குறைந்தன. படத்தில் நிர்வாணமே தெரியவில்லை அமலா பால் ஹார்டுவொர்க் செய்திருக்கிறார் என்ற புகழ்ந்தனர்.

வாய்ப்புகள் இல்லை
படமும் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றது. ஆனால் ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்குதான் பாவம் பட வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது.

அடுத்தடுத்து நீக்கம்
ஆடை படத்திற்கு முன்னதாக அவர் கமிட்டாகியிருந்த விஜய் சேதுபதி படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.
கவர்ச்சி போட்டோக்கள்
இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியானது. பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகை அமலா பால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபுல்லாக கவர்
பிகினி, மார்பழகு தெரிய கவர்ச்சி போட்டோக்கள் என விதவிதமாக உடுத்தி வாய்ப்பு தேடி வரும் அமலா பால், தற்போது ஒரு மாற்றத்திற்காக ஃபுல்லாக கவர் செய்தப்படி உடுத்தியிருக்கிறார்.

சைனிஸ் டிரெஸ்
பெட் ஷீட்டில் தைத்த நைட் டிரெஸ் போன்ற ஒரு வித்தியாசமான உடையில் முழுவதும் கவர் செய்திருக்கிறார் அமலா பால். கால்கள், கைகள் செம லூசாக உள்ளது அந்த சைனீஸ் உடை.

தெருவில் நின்று
ஆனாலும் அந்த போட்டோவில் அமலா பால் அழகாக இருக்கிறார். முகத்தில் அப்படி ஒரு கலை உள்ளது. இந்த உடையில் தெருவில் நின்றபடி விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார் அமலா பால்.

என்ன டிரெஸ் இது?
மேலும் அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் அவர் வெளியிட்டிருக்கிறார். அமலா பாலின் அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், என்ன உடை இது என கேட்டு கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











