Amala Paul: அரசியல் பரபரப்பையும் தாண்டி.. அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அமலா பால்!
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார் அமலா பால். தமிழில் தற்போது இவருக்கு புதிய படங்கள் கைவசம் இல்லையென்றாலும், சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புதுப்புது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அமலா பால் பதிவிட்டுள்ள புதிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அழகான கண்களால் கொண்டு ரசிகர்களை கவரும் அமலா பால், சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவருக்கு ஒரு நெகட்டிவ் இமேஜ் உருவானது. இருப்பினும், அதனைத் தொடர்ந்து மைனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு பெரிய அளவில் பாராட்டைப் பெற்று, படம் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது.

நடிகை அமலா பால்: மைனா திரைப்படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையாக மாறிய அமலா பால், விஜயுடன் தலைவா, தனுஷுடன் VIP, விக்ரமுடன் தெய்வ திருமகள் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்தார். இதற்கிடையில் இயக்குநர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில காலம் சினிமாவிலிருந்து விலகினார். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்திய அமலா பால், ஆடை திரைப்படத்தில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் அமலா பால் சில படங்களில் நடித்தாலும், தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள சினிமாவிலும் கவனம் செலுத்தினார்.
க்யூட் போட்டோஸ்: நடிகை அமலா பால் அண்மையில் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், உடல் எடை அதிகரித்திருந்த அமலா பால், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு தயாராக இருப்பதை மறைமுகமாக கூறி வருகிறார். அந்த வகையில், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் காட்டன் சேலையில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காரணமாக அரசியலில் பரபரப்பு நிலவி வரும் இந்த நேரத்திலும், அமலா பாலின் இந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications