அரைகுறை உடையில் கையில் சரக்கு பாட்டீலுடன் செம ஆட்டம் போடும் அமலா பால்.. விளாசி தள்ளும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை அமலா பால் அரைகுறை உடையில் கையில் சரக்கு பாட்டீலுடன் ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள் , வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நுழைந்ததுமே மளமளவென வளர்ந்தார் அமலா பால். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்த அமலா பால் டாப் நடிகையாக வலம் வந்தார்.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி

நடிகர் விஜய்யுடன் தலைவா, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, சூர்யாவுடன் பசங்க 2, உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார்.

ஏஎல் விஜய்யுடன் திருமணம்

ஏஎல் விஜய்யுடன் திருமணம்

அப்போது நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த போதே இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலா பால்.

விவகாரத்து - மீண்டும் நடிப்பு

விவகாரத்து - மீண்டும் நடிப்பு

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. மீண்டும் நடிக்க விரும்பிய அமலா பால் கணவரை விவாகரத்து செய்தார். கணவரை சட்டப்படி விவாகரத்து செய்த அமலா பால் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஆடை படத்தில் நிர்வாணமாக

ஆடை படத்தில் நிர்வாணமாக

ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்தார் அமலா பால். இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளானார். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகையும் இப்படி ஒரு கோலத்தில் நடிக்காத நிலையில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது பெரும் பேசு பொருளானது.

ரிலீஸ் செய்ய முடியவில்லை

ரிலீஸ் செய்ய முடியவில்லை


இதனை தொடர்ந்து ஏற்கனவே கமிட்டான பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார் அமலா பால். அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. அமலா பால் ஏற்கனவே நடித்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்ய யாரும் முன் வரவில்லை.

வெப் சீரிஸ்களில் அமலா பால்

வெப் சீரிஸ்களில் அமலா பால்

சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதால் வெப் சீரிஸ்கள் பக்கம் சென்றார் அமலா பால். தெலுங்கில் அடுத்தடுத்த வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமலா பால் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்தார்.

கவர்ச்சியான உடைகள்

கவர்ச்சியான உடைகள்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அமலா பால், அடிக்கடி போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் கூட கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

கையில் சரக்கு பாட்டீலுடன்

கையில் சரக்கு பாட்டீலுடன்

இதேபோல் அமலா நடத்தும் போட்டோ ஷூட்டுகளிலும் கிளாமர் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. இந்நிலையில் நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அதாவது டைட் மினி ஸ்கர்ட் க்ராப் டாப் தலையில் கேப் என அணிந்துள்ள அமலா பால் கையில் சரக்கு பாட்டீலுடன் செம ஆட்டம் போட்டுள்ளார்.

ஏஎல் விஜய் தப்பித்து விட்டார்

ஏஎல் விஜய் தப்பித்து விட்டார்

ஆண் நண்பர்கள் தோழிகள் என பலருடனும் சேர்ந்து முகம் சுளிக்க வைக்கும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார் அமலா பால். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நல்ல வேளையாக இயக்குநர் ஏஎல் விஜய் உங்களிடம் இருந்து தப்பித்து விட்டார் என விளாசியுள்ளனர்.

ஆண்கள் பலருடன் ஆட்டம்

ஆண்கள் பலருடன் ஆட்டம்

இன்னும் பலர் இது என்ன.. இப்படி ஆகிவிட்டீற்கள் என்று கேட்டு வருகின்றனர். சிலர் இது என்ன டான்ஸ் என்றும் நீங்கள் குடிகாரியா என்றும் கேட்டு வருகின்றனர். கையில் சரக்கு பாட்டீலை வைத்துக் கொண்டு ஆண்கள் பலருடன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் அமலா பால்.

உங்களின் டான்ஸ் அருமை

உங்களின் டான்ஸ் அருமை

அமலா பாலின் முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் சிலர் அவர் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திர பறவையாக தனது வாழ்க்கையை கொண்டாடி வருகிறார் என கூறி வருகின்றனர். சிலர், உங்களின் டான்ஸ் அருமை என்றும் பாராட்டி வருகின்றனர்.

பேச்சுலர் பார்ட்டி

பேச்சுலர் பார்ட்டி

இந்த குடி கொண்டாட்டம் எல்லாம் அமலா பாலின் சகோதரரின் பேச்சுலர் பார்ட்டியில் அரங்கேறியுள்ளது. இதில அமலா பாலின் சகோதரர் அபிஜித் பாலும் அவரது காதலியும் பங்கேற்றுள்ளனர். இந்த வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X