ஆண் நண்பர்களுடன் சரக்கு அடிக்கும் அமலா பால்.. வைரலாகும் வீடியோ !
கொச்சி : தமாதுண்டு குட்டி ட்ரௌசர் போட்டுக் கொண்டு தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் இணைந்து சரக்கும் கையுமாக அதகளம் செய்யும் நடிகை அமலா பால்.
சமீப காலமாக கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் தெறிக்கவிடும் அமலா தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நைட் பார்ட்டி வீடியோ ஒன்று பலராலும் ரசிக்க பட்டு வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்யுடன்
தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு முதல் முறையாக இணையும் இந்த படத்தில் அமலா பாலுக்கும் இயக்குனர் விஜய்க்கும் காதல் ஏற்பட்டு பின் அந்த காதல் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது.

நீண்ட இடைவெளிக்கு
இவ்வாறு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களின் திருமண வாழ்க்கை நெடு நாட்கள் நீடிக்கவில்லை, ஓரிரு வருடங்களிலேயே அந்த காதல் கசந்து இருவரும் நீண்ட மௌனதிற்கு பிறகு பிரிந்து சென்றனர். திருமணத்திற்கு பின் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டாத அமலா நீண்ட இடைவெளிக்கு பிறகு அம்மா கணக்கு படத்தின் மூலம் மீண்டும் நடிப்பை தொடங்கினார்.

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு
இந்நிலையில் சமீபத்தில் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து அனைவரையும் ஆச்சரியபடுத்தி இருந்தார். மேயாதமான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய ஆடை திரைப்படம் போஸ்டர் வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.

வியப்பில் ஆழ்த்தி
உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் வெறும் பேப்பரை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு வெற்று உடம்புடன் படத்தில் பல காட்சிகளில் சுற்றி வரும் அமலா பால் காண்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார், மேலும் இந்த படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பின் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஆண் நண்பர்ளுடன்
இவ்வாறு சர்ச்சைகளெல்லாம் சக்கரை பொங்கல் மாதிரி அமலா பாலுக்கு என்று ஆகிப்போன நிலையில் தற்போது
சமூக வலைத்தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் படுக்கையறை
போட்டோ ஷூட் செய்து வெளியிட்ட அமலா தற்போது ஆண் நண்பர்ளுடன் இணைந்து குடிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மூவரும் கொஞ்சியவாறு
அதில் வீட்டில் நைட் பார்ட்டி ஒன்றில்
தமாதுண்டு குட்டி ட்ரௌசர் அணிந்து கொண்டு ஆண் நண்பர்களுடன் இணைந்து சியர்ஸ் சொல்லி ஒரு கண்ணாடி கிளாஸில் இருக்கும் பானத்தை குடித்து விட்டு மூவரும் கொஞ்சியவாறு நடனமாடும் இந்த ஹவுஸ் பார்ட்டி வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என வாழ்த்தியும் இந்த வீடியோவை வைரலாக்கியும் வருகிறனர்.


Click it and Unblock the Notifications











