Amala paul: குடும்பத்துடன் சன்பாத்.. அமலா பாலுடன் இணைந்த கணவர் -மகன்.. பாலி பீச்சில் குதூகலம்!

சென்னை: நடிகை அமலா பால் அடுத்தடுத்து தனுஷ், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர். ஒரு கட்டத்தில் இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து, அந்த திருமண வாழ்க்கை சக்சஸ் ஆகாத நிலையில், அவரை விவாகரத்தும் செய்தார் அமலா பால். இதையடுத்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு சமீபத்தில் குழந்தையும் பெற்றுற்றார்.

திருமணம் செய்த நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த அமலா பால் நடிப்பில் கடந்த ஆண்டில் ஆடு ஜீவிதம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனிடையே தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடுத்தடுத்த கொண்டாட்ட வீடியோக்களை அமலா பால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

amala paul bali islands instagram

நடிகை அமலா பால்: நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழில் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அமலாபால் ஒரு கட்டத்தில் பிஸியாக இருந்தபோதே இயக்குனர் ஏஎல் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சில ஆண்டுகளில் கசப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் மனமொத்து பிரிந்து விவாகரத்தும் பெற்று விட்டனர். ஏஎல். விஜய் மறுமணம் செய்து கொண்ட நிலையில் சில ஆண்டுகளில் அமலாபாலும் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அமலா பால் 2வது திருமணம்: அமலா பால் தன்னுடைய காதலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து சில மாதங்களிலேயே திருமணம் நடந்து குழந்தையும் பெற்றுக் கொண்டார். இவரது காதல் வாழ்க்கை கொண்டாட்டமாக கழிந்து வருகிறது. கடந்த ஆண்டில் பிரித்விராஜுடன் அமலாபால் நடித்திருந்த ஆடு ஜீவிதம் படம் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான நிலையில் தற்போது குழந்தை பிறந்துள்ளதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து தன்னுடைய கணவர், குழந்தை என தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக என்ஜாய் செய்து வருகிறார்.

amala paul bali islands instagram

கொண்டாட்டத்தில் அமலா பால்: அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் மூலம் தன்னுடைய உற்சாகத்தையும் கொண்டாட்டமான வாழ்க்கையையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் அமலா பால், தற்போது பாலியில் தன்னுடைய குடும்பத்துடன் விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வருகிறார். பாலி தீவில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் கடற்கரையில் சன் பாத் எடுத்த புகைப்படங்களையும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் நீச்சல் உடையில் அமலா பால் உள்ள நிலையில் அவரை மறைத்தபடி அவரது கணவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.

amala paul bali islands instagram

குடும்பத்துடன் சன் பாத்: பாலி கடற்கரையில் தங்களது பிரச்சினைகளை மறந்துவிட்டு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை உற்சாகத்தை கொண்டாடி வரும் நிலையில் அவர்களில் ஒருவராக எந்தவித புகழையும் வெளிப்படுத்தாமல் அமலாபால் தன்னுடைய கணவர் மற்றும் க்யூட்டான குழந்தையுடன் அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறது. இதையடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பாரா இல்லை அடுத்த முயற்சியாக படங்களை தயாரிப்பாரா என்பது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X