மீண்டும் வெப் சீரிஸில் அமலா பால்... பாலிவுட் பாபியாக என்ட்ரி... என்ன மாதிரியான கதை தெரியுமா?

மும்பை: நடிகை அமலா பால் பாலிவுட் வெப் சீரிஸில் பாபியாக நடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் விதார்த்துக்கு ஜோடியாக நடித்த மைனா படத்தின் மூலம்தான் நடிகை அமலா பால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சினிமா படங்கள்

சினிமா படங்கள்

தொடர்ந்து தெய்வ திருமகன், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை..

வாய்ப்புகள் கிடைக்கவில்லை..

கடைசியாக ஆடை படத்தில் நடித்தார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார் அமலா பால். இதனால் கடும் சர்ச்சைக்குள்ளானார் அமலா பால். அதன்பிறகு தமிழ் சினிமாவில் நடிகை அமலா பாலுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

வெப் சீரிஸ்களின் பக்கம்

வெப் சீரிஸ்களின் பக்கம்

தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக தயாராகியுள்ள 'அதோ அந்த பறவை போல' மற்றும் 'கடாவர்' ஆகிய திரைப்படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. சினிமாவில் பழையப்படி வாய்ப்புகள் கிடைக்காததால் வெப் சீரிஸ்களின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால்.

பர்வீன் பாபியை மையப்படுத்தி

பர்வீன் பாபியை மையப்படுத்தி

தெலுங்கில் அடுத்தடுத்து பல வெப் சீரிஸ்களில் நடித்துள்ள அமலா பால் முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்று தயாராகியுள்ளது. 1970களில் பிரபலமான பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.

மகேஷ் பட் தயாரிப்பு

மகேஷ் பட் தயாரிப்பு

ரஞ்சிஷ் ஹி சஹி என்ற வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமலா பால். இந்த வெப் சீரிஸை மகேஷ் பட் தயாரித்துள்ளார். இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி கதாபாத்திரங்கள் இதில் நடிக்கின்றனர்.

வெப்சீரிஸ் ஓடிடி ரீலீஸ்

வெப்சீரிஸ் ஓடிடி ரீலீஸ்

புஷ்பதீப் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக இந்த வெப்சீரிஸ் வூட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெப்சீரிஸின் மூலம் நடிகை அமலா பால் இந்தி வெப் சீரிஸ் உலகிலும் தடம் பதிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X