Amala Paul: அமலா பாலின் மகன் இவ்வளவு வளர்ந்துட்டாரா? மகனுக்கு நடக்க கற்றுக் கொடுக்கறாங்க!

சென்னை: நடிகை அமலா பால் தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக உள்ளார். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியிருந்தாலும் இவரது நடிப்பு இவரை விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் அளவிற்கு கொண்டு சென்றது. இவர் தற்போது தனது மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகை அமலா பால் தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள் என்றால் அது தமிழ் படங்கள்தான். அதன் பின்னர், இவர் தென்னிந்திய அளவில் மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக உயர்ந்தார். மைனா படத்திற்கு இவருக்கு பல விருதுகள் கிடைத்தது. இயக்குநர் ஏ.எல். விஜய்யின் தலைவா மற்றும் தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தார். தலைவா படத்தில் நடிக்கும்போது, அவருடனான பழக்கம் காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

திருமண வாழ்க்கை எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை என்றாலும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். இவரது படங்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் பல படங்களில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி, தனது ரசிகர்கள் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார். பல படங்களில் அவருக்கு விருதுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மாநில அரசு விருதுகள், சைமா விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் கிடைத்துள்ளன.

Actress Amala Paul Gives Practice to Her 9 Months Old Son Ilai For Walk Cute Photos Goes Trending

அமலா பால்: இப்படி இருக்கும்போது, நடிகை கடந்த 2023ஆம் ஆண்டு தேசாய் என்ற தனது நெருங்கிய நண்பரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செம ஜோராக நடைபெற்றது. மேலும் இவர்கள் திருமணத்திற்கு முன்னர் இருந்தே சென்ற அவுட்டிங்கின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள். இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆண் குழந்தை பெற்றுக் கொண்டார்கள்.

புகைப்படங்கள்: அவர்களின் குழந்தைக்கு இலாய் என பெயர் சூட்டினர். இந்த பெயருக்கு சொர்க்கம் என்று பொருள். மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அவர்கள் அவ்வப்போது தங்கள் குடும்பப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். திருமணம், குழந்தை என அமலா பால் குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும், சினிமாக்களில் நடிக்க தற்போது கதை கேட்டு வருகிறார் என கூறப்படுகிறது.

Actress Amala Paul Gives Practice to Her 9 Months Old Son Ilai For Walk Cute Photos Goes Trending

மகன்: இந்நிலையில் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகன் இலாய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் மகனைக் கொஞ்சிக் கொண்டும், மகனுடன் விளையாடிக் கொண்டும் உள்ளார். இது மட்டும் இல்லாமல், மகனை நிற்க வைத்து, நடக்கவும் கற்றுக் கொடுக்கிறார் போலத் தெரிகிறது. அமலா பால் - தேசாய் தம்பதியரின் மகனான இலாய்க்கு இப்போது 9 மாதங்கள் ஆவதால் குழந்தை நடக்க முயற்சிக்கும் காலம் இது என்பதால் குடும்பத்தினர் செம ஹேப்பியாக உள்ளார்கள். மேலும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X