துரத்தும் சோகம்.. பொன்னியின் செல்வன் படத்தில் இருந்தும் நீக்கப்பட்ட ஆடை நாயகி? செம அப்செட்டாம்!
சென்னை: நடிகை அமலா பால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை அமலா பால் தெய்வத்திருமகள், மைனா, பசங்க, வேலையில்லா பட்டதாரி, தலைவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பீக்கில் இருந்தபோதே இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர்.

இரண்டாவது திருமணம்
இதனை தொடர்ந்து அமலா பாலின் முன்னாள் கணவரான ஏஎல் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நிர்வாணம்
இந்நிலையில் நடிகை அமலா பால், ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தார்.

பாராட்டு
இதனால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் அமலா பால். அதேநேரத்தில் தமிழ் நடிகைகள் யாரும் இதுவரை செய்யாத ஒன்றை துணிச்சலோடு செய்திருப்பதாக பலரும் அவரை பாராட்டினர்.

பொன்னியின் செல்வன்
ஆனால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த ஒரே காரணத்தினால் அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டார் அமலா பால். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பததாக கூறப்பட்டது.

கைவிட்ட மணிரத்னம்.
இதற்கான லுக் டெஸ்ட்டெல்லாம் கூட நடத்தப்பட்டது. ஆனால் அமலா பாலின் லுக் டெஸ்ட்டில் இயக்குநர் மணிரத்னத்திற்கு திருப்தி ஏற்படவில்லை என தெரிகிறது. இதனால் அவரை படத்தில் நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டுவிட்டாராம் மணிரத்னம்.

செம அப்செட்
இந்த தகவலை அறிந்த நடிகை அமலா பால், பெரும் மன உளைச்சலில் இருக்கிறாராம். தான் அந்தப் படத்தில் இல்லை என்பதை இயக்குநர் தம்மிடம் சொல்லாமல் இப்படி ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாரே செம அப்செட்டில் இருக்கிறாராம் அமலா பால்.


Click it and Unblock the Notifications











