Amala Paul: ஆத்துக்காரரோடு செம ஆட்டம் போடும் அமலா பால்.. கலக்குறீங்க மேடம்!
சென்னை: நடிகை அமலா பால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் முக்கியமான நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றிக் கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் இப்போது, கணவன் குழந்தை என செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது கணவருடன் சேர்ந்து கொண்டு பிரேக் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தாலும், அவருக்கு நல்ல அறிமுகத்தையும் மக்கள் மத்தியில் பரவலாகவும் கொண்டுபோய் சேர்த்த படம் என்றால் அது மைனா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக மாறினார். விஜய் உடன் அவர் இணைந்து நடித்த படமான தலைவா அவருக்கு தென்னிந்திய அளவிலும் நல்ல ரீச் கொடுத்தது.

திருமணத்திற்கு முன் கர்ப்பம்: தலைவா படத்தின் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலா பால். மூன்று ஆண்டிலேயே விவாகரத்தும் செய்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தேசாய் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே கர்ப்பமடைந்ததை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது பலருக்கும் ஷாக் கொடுத்தது.
திருமண வாழ்க்கை: இவரும் தேசாயும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு இவர்களின் முதல் குழந்தையான ஆண் குழந்தையை பெற்று எடுத்தார்கள். அந்த குழந்தைக்கு இலாய் எனவும் பெயரிட்டார்கள். இலாய் என்றால் சொர்க்கம் என்று பொருள் என கூறப்படுகிறது. திருமணம் குழந்தை என குடும்ப வாழ்க்கைக்குள் அமலாபால் சென்று விட்டாலும் அவரது ரசிகர்கள் அமலா பால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

பிரேக் டான்ஸ் வீடியோ: இது மட்டும் இல்லாமல், அமலா பாலும் அவ்வப்போது சில விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பேசி வருகிறார். இப்படி இருக்கும்போது அமலாபாலின் கணவர் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலா பால் செம க்யூட்டாக பிரேக் டான்ஸ் ஆடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. அதேபோல் லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. அமலா பால் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு மலையாளப் படங்களும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குறிப்பாக ஆடு ஜீவிதம் மற்றும் லெவல் கிராஸ் படங்கள் பெரும் பாரட்டுக்களைப் பெற்றது.


Click it and Unblock the Notifications











