Amala paul: வேட்டி சட்டையில் ஜொலிக்கும் அமலா பால் மகன்.. மகனுடன் இணைந்து பகிர்ந்த விஷயம்!
சென்னை: நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், ஒரு கட்டத்தில் தான் பிசியாக இருந்தபோதே இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். இவர்களுக்கு இலை என்ற மகன் பிறந்துள்ள நிலையில் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் அடுத்தடுத்து வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களின் வாழ்த்துக்களையும் லைக்ஸ்களையும் பெற்று வருகிறார்.

நடிகை அமலா பால்: நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்தில் ஏடாகூடமான கேரக்டரில் நடித்த போதிலும் கிடைக்காத கவனம் அடுத்ததாக மைனா படத்தில் மிகவும் ஹோம்லியான அப்பாவித்தனமான கேரக்டரில் நடித்ததின் மூலம் அமலா பாலுக்கு கிடைத்தது. தொடர்ந்து கோலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறி விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நாயகியாக நடித்துள்ளார் அமலா பால். ஒரு கட்டத்தில் பிசியாக நடிகையாக நடித்துக் கொண்டிருந்தபோதே இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அமலா பால் 2வது திருமணம்: ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. இதையடுத்து இருவரும் மனமொத்து பிரிந்தனர். ஒரு கட்டத்தில் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். இவர்களுக்கு கடந்த ஆண்டில் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு இலை என்று பெயர் வைத்துள்ளார் அமலா பால். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் அடுத்தடுத்து க்யூட்டான தருணங்களை செலவழித்து வருவதுடன் அதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்

மகனுடன் பொங்கல் வாழ்த்து: இந்நிலையில் தற்போது தன்னுடைய மகனை வேட்டி சட்டையில் அலங்கரித்து அவருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த படங்களில் அவரது மகன் மாப்பிள்ளை போல ஜொலிக்கிறார். அமலா பாலின் கெட்டப்பும் சிறப்பாக காணப்படுகிறது. அவரும் புடவையில் ஜொலிக்கிறார். தன்னுடைய மகனுடன் இணைந்து ரசிகர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை அமலா பால் பகிர்ந்துள்ளார். தன்னுடைய உடலை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்கும் திட்டத்தில்அமலா பால் உள்ளதாக தெரிகிறது. தற்போது அவர் கணிசமாக உடல் எடையை குறைத்துள்ளது அவரது அடுத்தடுத்த புகைப்படங்களில் தெரியவருகிறது.

ரசிகர்கள் ஆர்வம்: மீண்டும் அமலா பாலை படங்களில் பார்க்க ரசிகர்களும் ஆர்வம் காட்டும் நிலையில், அவர் அடுத்த கட்ட ரவுண்டுக்கு தயார் ஆவார் என்று எதிர்பார்க்கலாம். அமலா பால் திருமணத்திற்கு முன்பு நடித்த ஆடுஜீவிதம் மற்றும் லெவல் கிராஸ் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்துள்ள நிலையில், விரைவில் இவர் படங்களில் நடிப்பார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











