மகா சிவராத்திரி... ஈஷா யோகா மையத்தில் கணவரோடு அமலா பால்.. இப்படி மொத்தமா மாறிட்டாரே?
சென்னை: எந்த துன்பம் வந்தாலும் சிவனை நினைத்தால் வந்த துன்பம் வழிமாறிப் போகும். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியான எல்லாம் வல்ல அந்த சிவனுக்கென்ற மகத்துவமான ராத்திரியை கொண்ட நாள்தான் சிவராத்திரி. ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் பல நடிகை, நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில், நடிகை அமலா பால் தனது கணவருடன் கலந்து கொண்டார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற்ற இந்த மகா சிவராத்திரி விழாவில், ஆதியோகி திவ்ய தரிசனம், தியானங்கள், அருளுரை, பிரசித்தி பெற்ற கலைஞா்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரி: மகா சிவராத்திரி நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பல்வேறு மாநில ஆளுநர்களும் இதில் பங்கேற்றனர். மேலும், திரைப் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மகா சிவராத்திரி நிகழ்வில் சிறப்பித்தனர். இதற்காக ஈஷா யோகா மையத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கண்ணீர் விட்ட சந்தானம்: இதில், ஷங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகை தமன்னா, நடிகர் சந்தானம் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிவனை மனம் உருகி வேண்டிக்கொண்டனர். அந்த வகையில் பிரம்ம முகுர்த்தத்தில் நடந்த தியானத்தில், நடிகர் சந்தானம் மனம் உருகி கண்ணீர் விட்டு வேண்டிக்கொண்டார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானது. வடக்குபட்டி ராமசாமி படத்தில் வரும், சில வசனத்தால் சந்தானம் சர்ச்சையில் சிக்கினார். அப்போதும் நான் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார்.
கணவருடன் அமலா பால்: பல பிரபலங்களும் மகா சிவராத்திரியில் கலந்து கொண்ட நிலையில், நடிகை அமலா பால் தனது கணவர் ஜெகத் தேசாயுடன் மனம் உருகி வேண்டிக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, இந்த மஹாசிவராத்திரியில் சிவனும் சக்தியும் தெய்வீக சக்தியைத் தழுவுகிறார்கள் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு அமலா பால் மொத்தமாக மாறிவிட்டாரா என்று கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நீண்ட நாள் நண்பர்: தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பிஸியான நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பர் ஜகத் தேசாய்யை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, திருமணம் ஆன இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருக்கும், மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











