கையை தூக்கி அப்படி ஒரு போஸ்.. இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. அமலா பாலை ட்ரோல் செய்யும் ரசிகாஸ்!
சென்னை: நடிகை அமலா பாலுக்கு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னும் இணையத்தில் கணவரோடு இருக்கும் போட்டோ, குழந்தையுடன் இருக்கும் போட்டோ என பலவற்றை பகிர்ந்து வரும் அமலா பால், குழந்தை பிறந்ததை மறந்துவிட்டு, கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் உச்சுகொட்டி வருகின்றனர்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அமலா பால். இந்த படத்திற்கு முன் அவர் ஒரு தமிழ் படத்தில் நடித்த போதும், சிந்து சமவெளி திரைப்படம் தான் அவருக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரம் அதாவது மாமனாருடன் கதாக உறவு வைத்து இருக்கும், சர்ச்சைக்குரிய ரோலில் நடித்திருந்தார். இதன் காரணமாக, பலரது கவனத்துக்கு உள்ளான அமலா பாலுக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

பேசப்பட்ட படம்: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல் கண்களால் பேசி நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் மூலம் நடிகர் விஜயின் தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின் விக்ரம் , தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

காதல் திருமணம்: சினிமாவில் பிஸியாக நடித்து வந்த அமலா பால், தலைவா பட இயக்குநர் ஏ.எல் விஜயை காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் அவரையை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர். இவர்கள் இருவரும் பிரித்ததற்கான காரணத்தை சொல்லாத நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால், விவாகரத்திற்கு பின் மீண்டும் நடித்த அமலா பால், ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். அதன் பிறகு அமலா பாலுக்கு தமிழில் எந்த படமும் இல்லை, அண்மையில் பிரித்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படத்தில் நடித்தார். அந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.

இரண்டாம் திருமணம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த அமலா பால், திருமணமான சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால், அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்று பேச்சும் எழுந்தது.

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்: நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த போட்டோவை அமலா பால் இணையத்தில் வெளியிட்டு குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்து உள்ளதாக அறிவித்தார். குழந்தை பிறப்பிற்கு பிறகு கணவருடன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது கையை தூக்கி கொண்டு தொடை தெரியும் வகையில் இருக்கும் போட்டோவை அப்லோடு செய்துள்ளார்.அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், குழந்தை பிறந்ததை மறந்துவிட்டீர்களா என்றும்,இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











