அமலா பால் வீட்டில் விசேஷம்.. மகனுக்காக சர்ச்சில் நடந்த விழா.. ஓடி வந்து வாழ்த்திய உறவுகள்!
சென்னை: நடிகை அமலா பாலுக்கு கடந்த ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னும் இணையத்தில் கணவரோடு இருக்கும் போட்டோ, குழந்தையுடன் இருக்கும் போட்டோ என பலவற்றை அமலா பால் பகிர்ந்து வருகிறார். தற்போது, இவர் தனது குழந்தைக்கு கிறிஸ்துவ முறைப்படி ஞானஸ்தானம் செய்துள்ளார். அந்த போட்டோவை தற்போது அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை அமலா பால். இந்த படத்திற்கு முன் அவர் ஒரு தமிழ் படத்தில் நடித்த போதும், சிந்து சமவெளி படம் தான் அவருக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அதற்கு காரணம், அந்த படத்தில் அமலா பால் ஒரு விவகாரமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தான். அந்த படத்தில் மாமனாருடன் தகாத உறவு வைத்து இருக்கும், சர்ச்சைக்குரிய ரோலில் நடித்திருந்தார். இந்த ரோலில் நடிப்பதற்கு உண்மையில் துணிச்சல் வேண்டும் என்றாலும், படம் வெளியான போது பலரும் இவரை விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனமே இவர் வளர்த்துவிட்டது எனலாம்.

மைனா படம்: இதையடுத்து, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்தில் விவகாரமாக நடித்து விட்டு இரண்டாவது படத்தில் கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல் கண்களால் பேசி நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் மூலம் நடிகர் விஜயின் தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின் விக்ரம் , தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்ததார்.
கணவரை பிரிந்தார்: தலைவா படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல் விஜயை காதலித்தார். இதையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் அவரையை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்காமல் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து இருந்தனர். பின், இருவரும் விவகாரத்து பெற்று மொத்தமாக பிரிந்தனர். விவகாரத்திற்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த அமலா பால், ஆடை, அம்மா கணக்கு போன்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லாததால், அமலா பாலுக்கு தமிழில் எந்த படமும் இல்லை, அண்மையில் பிரித்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படத்திலும், லெவல்கிராஸ் படத்திலும் நடித்திருந்தார்.
இரண்டாம் திருமணம்: இதையடுத்து, நடிகை அமலா பால், தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரிலீஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த அமலா பால், திருமண சில நாட்களிலே கர்ப்பமாக இருப்பதாக இருப்பதாக அறிவித்தார். இதனால், அமலா பால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்ற பேச்சுக்களும் எழுந்தன. இதையடுத்து அமலா பாலுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்துள்ளார். குழந்தை பிறப்பிற்கு பிறகு கணவருடன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது, மகனுக்கு கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் செய்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











