Amala paul: ரொம்ப போர் அடிக்குதாம் அமலா பாலுக்கு.. காலை பிடித்துவிட்ட கணவர்.. கியூட்!

சென்னை: நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்து வருகிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு உள்ளிட்ட தளங்களில் பயணிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான ஆடுஜீவிதம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஏஎல் விஜய்யுடனான பிரிவிற்கு பிறகு இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட அமலா பாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலா பால் நடிப்பில் ஆடு ஜீவிதம் படம் வெளியான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு லெவல் கிராஸ் என்ற த்ரில்லர் படமும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

amala paul instagram

நடிகை அமலாபால்: நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வெற்றி படங்களில் நடித்துள்ளவர். தமிழில் சிந்து சமவெளி என்ற அதிரடி படத்தில் நடித்த போதிலும் இவருக்கு அதிகமான கவனம் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்ததாக இவர் நடித்த மைனா படம் மிகப் பெரிய அளவில் பட்டி தொட்டி எங்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்களை கொண்டு சேர்த்தது. இதையடுத்து தமிழில் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்துள்ளார் அமலா பால். ஒரு கட்டத்தில் தன்னுடைய படங்களை இயக்கிய ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

amala paul instagram

இரண்டாவது திருமணம்: ஆனால் இவர்களது திருமணம் சில ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. இருவரும் மனமுவந்து பிரிந்த நிலையில் சிறிது காலம் தயாரிப்பு, நடிப்பு என தன்னை எங்கேஜ் செய்து கொண்ட அமலாபால், தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் காதல் திருமணம் தான். சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார் அமலா பால். தன்னுடைய கணவர், குழந்தை என அடுத்தடுத்த பதிவுகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சில கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை இவர் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பதிவு: இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை க்யூட் என சொல்ல வைத்துள்ளது. தற்போது வீட்டில் குழந்தையுடன் நேரத்தை செலவழித்து வரும் அமலா பால், விதவிதமான சேட்டைகளுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி போட்டு பார்க்கிறார், தலையை கோதுகிறார். இவ்வாறு இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் தன்னுடைய கணவர், தன்னுடைய காலை பிடித்து விடும்படியான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதிரடி கருத்து: தன்னுடைய கருத்துக்களை அதிரடியாக வெளிப்படுத்துவதில் சிறப்பானவராக அமலா பால் காணப்படுகிறார். சமீபத்தில் லெவல் கிராஸ் பிரமோஷனுக்காக வந்த அமலா பால், ஷார்ட் டிரஸ்ஸில் கல்லூரி மாணவர்களிடையே பேசினார். இந்த விஷயம் சர்ச்சைக்குள்ளான நிலையில், பிரச்சினை தன்னுடைய உடையில் இல்லை என்றும் கேமரா கோணத்தில்தான் இருந்ததாகவும் கூறியிருந்தார். இதனிடையே, தற்போது கேரளாவை ஆட்டிப்படைத்துவரும் ஹேமா கமிட்டி அறிக்கையில், பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X