Amala paul: வட்டம், சதுரம்.. அதுமேல குத்த வச்சு உக்காந்த அமலா பால்.. ரசிகர்கள் தான் பாவம்!
சென்னை: கேரளாவில் பிறந்த நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருக்கிறார். இவர் சினிமாவிற்கு வந்த புதிதில், பட வாய்ப்புகள் இல்லாமல் அலைந்தபோது சிந்து சமவெளி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் விவகாரமான படமாக இருந்தாலும் பட வாய்ப்புகள் இல்லாததால் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அமலாபால் அந்த திரைப்படத்தில் நடித்தார்.
அந்த திரைப்படம் அமலா பாலுக்கு பெரிதாக பெயர் வரவில்லை என்றாலும், நெகட்டிவ் விமர்சனங்களால் அமலாபால் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். அந்த நெகட்டிவ் விமர்சனமே அவருக்கு மைனா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தில் முதல் படத்திற்கும் அடுத்த படத்திற்கும் சம்பந்தமே இல்லாதபடி குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அமலாபால். மைனா படம் இவருக்கு பெயரை பெற்று கொடுத்ததால், அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமலா பாலுக்கு தேடி வந்தது.

நடிகை அமலா பால்: தமிழ் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விக்ரம், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார் நடிகை அமலா பால். தலைவன் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. விவகாரத்திற்கு பின் தனியாக வாழ்ந்து வந்த அமலா பாலுக்கு படவாய்ப்பே இல்லாமல் போனதால், கடாவர் படத்தை தானே தயாரித்து ஓடிடி தளத்தில் வெளியிட்டார் அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஆனால், தமிழ் சினிமாவில் அவருக்கு எந்த வாய்ப்பு வரவில்லை, மலையாளத்தில் ஒன்று இரண்டு திரைப்படத்தில் நடித்து வந்தார்.
அட்டகாசமான போஸ்: நடிகை அமலா பால் திடீரென தனது நண்பர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் வெகு சில உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பெரிய பிரபலங்கள் யாரும் இந்த திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அண்மையில் குழந்தையின் முதலாமாண்டு பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கும் அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் குட்டி டவுசருடன் போஸ் கொடுத்துள்ளார். வட்டம், சதுரம் என பேட்டி பெட்டியாக இருக்க, அதன் மேல் ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். குட்டி டவுசரில் அட்டகாசமாக இருக்கும் அமலா பாலை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











