சுத்திப் போடுங்க.. கண்ணுப்படப் போகுதுங்க; நிறை மாத நிலவே வா வா.. ரீல்ஸ் வெளியிட்ட அமலா பால்!
சென்னை: சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமலா பால். அதன் பின்னர் மைனா படத்தின் வெற்றி அமலா பாலை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதையடுத்து தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள நடிகையாக வலம் வந்தார். தளபதி விஜயுடன் தலைவா படத்தில் நடித்ததன் மூலம், அப்படத்தின் இயக்குநர் விஜயுடன் காதல் ஏற்படவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒருகட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கனிசமான படங்களில் மட்டும் நடித்து வந்த அமலா பால் மாற்று மொழிப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார்.
அமலா பால் திருமணம்
ஆடை படத்தின் உடம்பில் சிறு துணி இல்லாமல் நடித்து மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இவர் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தனது காதலர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னர் இருந்தே இருவரும் காதலைப் பகிர்ந்து கொண்ட வீடியோக்கள் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் பகிர்ந்து வந்தார். திருமணத்திற்குப் பின்னர் இவர்களது காதல் போஸ்ட்க்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது என நெட்டிசன்கள் புலம்பும் அளவிற்கு அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினை நிரப்பிக் கொண்டு இருந்தார். ஒருபுறம் அமலா பாலைப் பாத்து கடுப்பாகும் ரசிகர்கள் இருந்தாலும் மறுபுறம் அமலா பால் தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அமலா பால் இன்ஸ்டாகிராம் போஸ்ட்
இந்நிலையில் அமலா பால் மற்றும் ஜெகத் தேசாய் தம்பதியினர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். அதன் பின்னர் தனது வயிற்றில் குழந்தை வளர்ந்து வருவது தொடர்பான புகைப்படங்களை அமபா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். குறிப்பாக பச்சை நிற துணி அணிந்து கொண்டு அமலா பால் எடுத்த போட்டோ சூட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா என கூறும் அளவிற்கு கொள்ளை அழகாக இருந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் செல்லினா கோம்ஸின் பாடலான “ காம் டவுன்” பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்பதற்கே அழகாக உள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அமலா பால் அந்த வீடியோவில் பார்க்க பேரழகியாக உள்ளார். அமலா பாலின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலர், இது ”காம் டவுன் பாடவேண்டிய நேரம் இல்லை, உங்கள் குழந்தையிடம் கம் டவுன்” என பாடவேண்டிய நேரம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











