»   »  ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் புது அவதாரம் எடுக்கும் அமலா பால்

ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் புது அவதாரம் எடுக்கும் அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை அமலா பால் பாடகி அவதாரம் எடுக்கத் தயாராகிவிட்டார்.

அமலா பாலின் திருமண வாழ்க்கை கசந்து விவாகரத்தில் முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சினிமாவை தவிர தனக்கு வேறு நினைப்பு இல்லை என்று அமலா தெரிவித்துள்ளார்.

அமலா அச்சயான்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.

அமலா

அமலா

கண்ணன் இயக்கும் அச்சயான்ஸ் படத்தில் ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அமலா பால், அனு சித்தாரா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

பாடகி

பாடகி

அச்சயான்ஸ் படம் மூலம் அமலா பால் பாடகி அவதாரம் எடுக்கிறார். ஆம், இந்த படத்தில் அவர் பாடல் ஒன்றை பாடுகிறார். அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

திருட்டுப் பயலே 2

திருட்டுப் பயலே 2

ஹிட்டான திருட்டுப் பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை சுசி கணேசன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு பாட்டு பாடுமாறு சுசி அமலாவை கேட்டாராம். அமலாவும் பாட சம்மதித்துள்ளாராம்.

தனுஷ்

தனுஷ்

அமலா தனுஷுடன் வட சென்னை, வேலையில்லா பட்டதாரி 2, சின்ட்ரெல்லா, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

English summary
Actress Amala Paul has taken singer avatar through her upcoming Malayalam movie Achayans being directed by Kannan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil