Amala paul:அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

சென்னை: நடிகை அமலாபால் சிந்து சமவெளி படம் மூலம் அதிரடியாக ரசிகர்களை கவர்ந்தவர். அடுத்ததாக இவரது நடிப்பில் தமிழில் வெளியான மைனா படம் ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அமலாபால் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார்.

இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில வருடங்களிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் ஜெகத் தேசாய் என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், தன்னுடைய கர்ப்பத்தை கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

Amala paul Jagat desai tamil cinema Instagram

நடிகை அமலா பால்: சிந்து சமவெளி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை அமலா பால். முதல் படத்திலேயே அதிரடியான கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து அமலா பால் நடிப்பில் வெளியான மைனா படம் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அடுத்தடுத்து விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை அமலாபால், ஒரு கட்டத்தில் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2017ம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர்.

அமலா பால்-ஜெகத் தேசாய் திருமணம்: இந்நிலையில் கடந்த ஆண்டில் ஜெகத் தேசாய் என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். கடந்த ஜனவரி மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அமலா பால் கர்ப்பமான சூழலில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக காணப்பட்டார். தன்னுடைய கணவருடன் மற்றும் வயிற்றில் இருக்கும் தன்னுடைய குழந்தையுடன் அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வந்தார். வயிற்றில் குழந்தையுடன் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்து டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். கர்ப்பகால போட்டோஷுட் எடுத்து அதையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

Amala paul Jagat desai tamil cinema Instagram

ஆண் குழந்தை பிறந்துள்ளது: இந்நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார். கடந்த 11ம் தேதி தனக்கு குழந்தை பிறந்ததாகவும் தற்போது குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது அறை அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அவர் தன்னுடைய குழந்தையுடன் அந்த அறைக்குள் நுழைந்து சர்ப்ரைஸ் ஆவதாக அந்த வீடியோவில் காணப்பட்டது. தன்னுடைய குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளார் அமலா பால். நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடு ஜீவிதம் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

மீண்டும் நடிப்பாரா?: இந்த படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து அமலா பால் நடித்திருந்தார். நீண்ட காலங்களாக இந்த படம் இயக்கப்பட்டு தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கடந்துள்ளது. இந்த வெற்றி கொடுத்த சந்தோஷத்தை விட தற்போது மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் அமலா பால். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் சில மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் அமலா பால் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டு வந்த நிலையில் அதை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X