மொட்ட தலையில் முத்தம்.. ஆண் நண்பருடன் அமலா பால் நெருக்கம்.. அடுத்து இவரா என விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை அமலா பால் ஆண் நண்பர் ஒருவரின் மொட்டத் தலையில் முத்தம் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளியுள்ளனர்.
Recommended Video
நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து விதார்த்துடன் மைனா படத்தில் நடித்தார்.
இதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற அவர், அடுத்தடுத்து தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என அவர் நடித்த அனைத்து படங்களுமே ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றது.

விவாகரத்து
பின்னர் தன்னை வைத்து தெய்வ திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஎல் விஜயை திருமணம் செய்தார். ஆனால் மீண்டும் படங்களில் நடிக்க விரும்பிய அமலா பால் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அவரை விவாகரத்து செய்தார்.

இரண்டாவது திருமணம்
அவரது விவாகரத்துக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என கூறப்பட்டது. விவாகரத்துக்கு பிறகும் அடிக்கடி நடிகர் தனுஷுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார் நடிகை அமலா பால். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவ்னீந்தர் சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

விரக்தி போஸ்ட்
ஒரே ஒரு முறை மட்டும் அவரது திருமண போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த போட்டோக்கள் ஒரே நாளில் நீக்கப்பட்டது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள அமலா பால் தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். மேலும் தனது கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.

ஆண் நண்பருடன்..
அவரது பதிவுகள் அனைத்தும், அவரது இரண்டாவது திருமணம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை காட்டும் வகையிலேயே உள்ளது. இந்நிலையில் இருட்டான படுக்கையறையில் தனது ஆண் நண்பருக்கு அவரது மொட்ட தலையில் முத்தம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அமலா பால்.

பிறந்தநாள் வாழ்த்து
அமலா பால் ஷேர் செய்துள்ள இந்த போட்டோ அதற்கு அவர் கொடுத்திருக்கும் கேப்ஷன் மூலம் அந்த நபர் வனத்தின் மீது ஆர்வம் கொண்டவர் என்றும் தெரிகிறது. உபூ என்ற பெயரை கொண்ட அந்த நபரை உங்களை போல் உங்கள் எண்ணங்களும் ஃபிரியாக சுற்றட்டும் என பதிவிட்டுள்ளார்.

அடுத்தது இவரா?
அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அடுத்தது இந்த நபர் தானா என கேட்டு விளாசி வருகின்றனர். இதேபோல் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டியும் அவரது வழுக்கை தலையில் கேக்கை பூசியும் கொண்டாடி இருக்கிறார் அமலா பால்.

வெளியிடவில்லை
நண்பர்களுடன் சேர்ந்து அவர் கொண்டாடி இருக்கும் போட்டோக்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் இருக்கும் எந்த போட்டோவையும் இதுவரை வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

ஆண் குழந்தை
இந்நிலையில் அமலா பாலின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது. அமலா பாலின் முதல் கணவரான ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்தார். அவர்களுக்கு கடந்த வாரம் அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











