காட்டு ராணி கெட்டப்பில் அமலாபால்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை : ஆடை படத்திற்குப் பிறகு ஆளே மாறிப் போன நடிகை அமலாபால் தொடர்ந்து சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு ஒவ்வொரு முறையும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஆடை மற்றும் ராட்சஷன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இப்பொழுது "அதோ அந்த பறவை போல" திரைப்படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிவரும் அமலாபால் இப்பொழுது நடுக்காட்டில் கண்டபடி சுற்றி திரிந்தவாறு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அவை ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது.

விருதுகள் பாராட்டுக்கள்
தமிழ் திரைப்படத்துறைக்கு "சிந்து சமவெளி" திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமான அமலா பால் அதைத்தொடர்ந்து மைனா திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

மலையாளத்தில்
மைனா திரைப்படத்தை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், தெய்வத்திருமகள், வேட்டை, வேலையில்லா பட்டதாரி, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா என தொடர் வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக முன்னேறிய நிலையில் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிஸியாக நடித்து வந்தார்.

புளித்துப் போக
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் ஒரு சில வருடங்களிலேயே அந்த காதல் புளித்துப் போக அதிரடியாக விவாகரத்து பெற்றுக்கொண்டார். விவாகரத்திற்கு பிறகு திரைத்துறையில் சுதந்திரப் பறவையாக தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு சுற்றித்திரியும் அமலாபால் ஒருபுறம் தரமான திரைப்படங்களில் நடித்து பாக்ஸ் ஆபீசை கலக்கி வந்தாலும் மறுபுறம் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு சிறந்த நாயகி என்ற பெயரிலிருந்து சர்ச்சை நாயகி என்ற பெயரையும் எடுத்து வருகிறார்.

கூத்தும் கும்மாளம்
கொரானா பொதுமுடக்கத்தால் வீட்டில் முடங்கியுள்ள அமலாபால் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து கூத்தும் கும்மாளமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் கதிகலங்க வைத்த நிலையில் இப்பொழுது புது விதமான கெட்டப்பில் வந்து அசத்தி இருக்கிறார்.

டபுள் மீனிங்கில்
நடுக்காட்டில் வித்தியாசமான உடையில் கண்டபடி சுற்றித்திரியும் அமலாபால் இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட பலரும் இவரை வர்ணித்து வரும் அதே சமயம் "இந்த லுக்கில் நீங்க சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கீங்க" என பயங்கரமான காம்ப்ளிமென்ட்டையும் ரசிகர்கள் கொடுத்த வர மற்றொருபுறம் ஒரு சிலர் டபுள் மீனிங்கில் "இது லெஜெண்ட்ஸ்க்கு மட்டும்தான் தெரியும்" என போடி வைத்து பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











