Don't Miss!
- Lifestyle
ஆயுர்வேதத்தின் படி உங்க நகங்களில் அறிகுறிகள் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் ஆபத்தில் இருக்காம்... ஜாக்கிரதை!
- Automobiles
டாடாவிற்கு சரியான போட்டி தயார்... இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- News
திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த எடப்பாடி.. 30 நிமிடங்கள்.. என்ன நடந்தது? ரகசியமாம்!
- Finance
சீனாவை ஆட்டி படைத்த சவால்கள்.. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவலை!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
என்ன இது மண்டை.. அதுல ஒரு கொண்டை..அமலா பாலை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை : நடிகை அமலா பாலின் வித்தியாசமான மண்டையை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இவர் 2009 முன்னணி ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.பின் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து..புது பொலிவுடன் எச்.டி.யில் வெளியாகும் 'சிரித்து வாழ வேண்டும்’

நடிகை அமலா பால்
அமலா பால் நடித்த மைனா திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதன் பின்னர் விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஜெயம் ரவி உடன் நிமிர்ந்து நில், அதர்வா உடன் முப்பொழுதும் உன் கற்பனை என பல படத்தில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

சர்ச்சையில் சிக்கினார்
இயக்குநர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்து படங்களில் கவனம் செலுத்தினார். ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி, ஆடை திரைப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

கடாவர் படத்தை இயக்கினார்
நடிகையாக மட்டும் இருந்த அமலா பால் கடாவர் படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறியுள்ளார். க்ரைம் படமான கடாவர் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியானது இந்த படத்தில் அமலா பால் தோற்றம், நடிப்பு என அனைத்திலும் ஒட்டுமொத்தமாக வித்தியாசத்தை காட்டி ஸ்கோரை அள்ளினார்.

விரைவில் ரிலீஸ்
ஆடு ஜீவிதம் என்ற மலையாள படங்களில் அமலா பால் நடித்து வருகிறார். மேலும், போலா என்ற இந்தி படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். நீண்டநாட்களாக வெளியாகாமல் கிடப்பில் இருந்த அதோ அந்த பறவை போல படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

என்ன இது மண்டை..
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், தற்போது வித்தியாசமான மண்டையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அந்த போட்டோவில் மண்டையில் தாறுமாறாக கோடு போட்டு ரோடே போட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், என்ன இது மண்டை.. அதுல ஒரு கொண்டை என ரைமிங்கில் கிண்டலடித்து வருகின்றனர்.