Amala paul: மது பாட்டிலுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை அமலா பால்.
மிகவும் பிசியான நடிகையாக இருந்த அமலா பால், தற்போது அதிகமான பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் அமலா பால், அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

மது பாட்டிலுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால்: நடிகை அமலா பால் விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து தமிழில் நடித்துள்ளவர். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவருக்கு இந்தப் படம் அதிரடியாக அமைந்தது. இந்தப் படத்திற்கு முன்னதாகவே மலையாளத்தில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார். தொடர்ந்து தமிழில் அமலா பால் நடித்திருந்த மைனா படம் சிறப்பாக அமைந்தது. அமலா பாலுக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்த இந்தப் படம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.
விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்திருந்தார் அமலா பால். இந்தப் படத்தை அவரது முன்னாள் கணவர் ஏஎல் விஜய் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரு பாகங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய அளவில் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அமலா பாலுக்கு தற்போது அதிகமான பட வாய்ப்புகள் இல்லாத சூழல் காணப்படுகிறது.

கடைசியாக இவரது நடிப்பில் பாலிவுட்டில் போலா படம் வெளியானது. தொடர்ந்து மலையாளத்திலும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் அமலா பால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதிகமான லைக்ஸ்களையும் பெற்று வருகிறார்.
தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு மாஸ் காட்டி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பாலை தற்போது ஏறக்குறைய 5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அமலா பால், கடற்கரையில் கவர்ச்சி உடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களில் ஒன்றில் ஒருபுறம் ஜூஸ் பாட்டில் மறுபுறம் மதுபாட்டிலுடன் காணப்படுகிறார் அமலா பால். கண்களில் கூலர்சுடன் இந்தப் புகைப்படங்களில் ஸ்டைலிஷ்ஷாகவும் உள்ளார். இந்நிலையில் மதுபாட்டிலுடன் பட்டப்பகலில் அமலாபால் காணப்படும் இந்தப் புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மேலும் ட்ரெண்டிங்கிலும் உள்ளது. தொடர்ந்து பிகினி புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாட்டங்கள் என அடுத்தடுத்த பதிவுகளால் சர்ச்சைக்குள்ளாகி வருகிறார் அமலா பால்.


Click it and Unblock the Notifications











