அம்மாவின் பிறந்தநாளுக்கு அமலா பால் செய்த தரமான சம்பவம்.. வாழ்த்திய பேஃன்ஸ்!

சென்னை : நடிகை அமலா பால், தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு தரமான சம்பவத்தை செய்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வந்த அமலாபால், இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான ஒரு சில வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்த அமலாபால் விவாகரத்துக்கு பின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆடை படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அந்த படங்கள் பெரிதாக கை கொடுக்காததால், மன வருத்தத்தில் இருந்த அமலா பால் ஆண் நண்பருடன் இரவு பார்ட்டி, மது பாட்டில் கையுமாக குத்தாட்டம் என இணையத்தில் அலப்பறை கொடுத்து பெயரை கெடுத்துக் கொண்டார்.

கடாவர் படத்தை தயாரித்தார்

கடாவர் படத்தை தயாரித்தார்

இதன்பின் கைவசம் எந்த படமும், இல்லாததால், இன்ஸ்டாகிராமில் தத்துவங்களை பேசி புலம்பி வந்தார். அண்மையில் ஓடிடியில் நேரடியாக வெளியான கடாவர் படத்தில், தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்தது மட்டுமில்லாமல், படத்தைத் தானே முன் வந்து தயாரித்தும் இருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

போலா இந்தி படத்தில்

போலா இந்தி படத்தில்

தற்போது அமலா பால், போலா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதில், அமலா பால், அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளார். 3டி-யில் உருவாகி உள்ள இப்படம், வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜின் 'கைதி படத்தின் இந்தி ரீமேக் தான் போலாவாகும்.

ஆன்மீகப்பயணம்

ஆன்மீகப்பயணம்

சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால், கடந்த சில நாட்களாக கோவில், குளம் என ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது இந்தோனேஷியாவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள அமலா பால், தனது தாயார் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நினைவாக மரக்கன்று ஒன்றை பாலி தீவில் நட்டு உள்ளார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், தனது அம்மாவின் பிறந்தநாளில் அவரது அருகில் இருக்க முடியாவிட்டாலும் அவரது நினைவாக இந்த மரத்தை நடுகிறேன். என் அம்மாவை தான் மிகவும் நேசிக்கிறேன் அவருக்கு இனிமையான வாழ்த்துக்கள் என மகிழ்ச்சியோடு அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X