Amala paul: புடவையில் குனிந்து பொங்கல் வாழ்த்து சொன்ன அமலா பால்.. ரசிகர்கள் செம ஹேப்பி!
சென்னை: தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகை வந்தாலும் விடாமல் போட்டோக்களை வெளியிட்டு ஒரு கலக்கு கலக்கு வருகிறார் நடிகை அமலா பால். திருமணமானதும் அமலாபாலை கையில் பிடிக்கமுடியவில்லை என்று சொல்லும் அளவிற்கு, ஒவ்வொரு பண்டிகைக்கும் தனது கணவருடன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பொங்கலுக்கு ஹாட்டான போட்டோக்கள் வெளியிட்டு பொங்கல் வாழ்த்து கூறியிருக்கிறார். இந்த போட்டோக்கள் தற்போது டிரெண்டாகி வருகிறது.
நடிகை அமலா பால், தன்னை பற்றி எந்த சர்ச்சைகள் வந்தாலும், அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாம தன் மனதில் பட்டதை துணிச்சலோடு செய்து வருகிறார். அமலா பால் நடித்த முதல் படமான, சிந்து சமவெளி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் மாமனாரை வளைத்து போடும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் பலவிதமான விமர்சனங்களை அமலா பால் சந்தித்த போதும், அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து போராடி மைனா படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

பிரிந்தனர் : மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெய்வமகள், வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, ராட்சசன் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார். தலைவா படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட, ஏ.எல்.விஜய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது ஒரு மகளும் இருக்கிறார்.

காதல் திருமணம்: விவகாரத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் அமலா பால். ஆனால் இவருக்கு படவாய்ப்பு வராததால், கேடவர் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார். இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.அமலா பால் நடிப்பில் கடைசியாக ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பிரித்விராஜின் மனைவியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அமலா பால், நீண்டநாள் நண்பர் ஜெகத் தேசாய் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், ஜூன் மாதமே அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இப்படியா வாழ்த்து சொல்வது: குழந்தை பிறப்புக்கு பிறகு கணவரோடு மிகவும் ஜாலியாக பொழுதை கழித்து வரும் நடிகை அமலா பால், எந்த பண்டிகை வந்தாலும் தனது கணவர், குழந்தையோடு இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புடவை காட்டிக் கொண்டு, குனிந்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இப்படியா பொங்கல் வாழ்த்து சொல்வது என்றும், எது எப்படியோ ரசிகர்கள் ஹேப்பித்தான் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அமலா பாலின் இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











