திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமா? அவசர கல்யாணத்திற்கு காரணம் இதுதானா!

சென்னை: நடிகை அமலா பால் தனது நீண்ட நாள் நண்பன் ஜகத் தேசாய அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதற்கு காரணமே, அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்தது தான் என்று இணையத்தில் ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலா பால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தனியாகவே இருந்தார்.

ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த அமலா பால், சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது மாமனாரை காதலிக்கும் விவகாரமான கதையில் நடித்ததால், முதல் படத்திலேயே சர்ச்சை நாயகி என பெயர் எடுத்தார். இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனாவில் நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்ததோடு, அமலா பாலுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

actress amala paul pregnant before marriage? Is this the reason for sudden marriage?

இதையடுத்து, விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தெய்வத் திருமகள் படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலிக்க தொடங்கிய அவர் பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் வாழ்க்கை இரண்டே வருடங்களில் முறிந்துவிட்டது. அதனையடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி சிங்கிளாக வலம் வந்த நடிகை அமலா பால் இணையத்தில் தத்துவத்தை பேசி புலம்பிவந்தார். சில காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அமலா பால், கடாவர் படத்தை தயாரித்து நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு மீண்டும் சினிமாவில் வலம் வரத்தொடங்கினார்.

கோலாகலத் திருமணம்: விவாகரத்துக்குப் பின்னர் கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்த அமலா பால், தற்போது தனது நீண்ட நண்பரை நவம்பர் மாதம் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அமலா பாலின் பிறந்தநாளை கொண்டாட்டத்தில், அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், தனது காதலை தெரிவித்தார். இதனை எதிர்பார்க்காத அமலா பால், நண்பரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட போட்டோவை ஷேர் செய்திருந்தனர். இதையடுத்து,இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் ஷேர் செய்துள்ளனர்.

அமலா பால் கர்ப்பம்: புதுமண தம்பதிகளான இவர்கள் தேன் நிலவை கொண்டாடி வந்த நிலையில், நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவை ஷேர் செய்து கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக ஜகத் தேசாய் உங்களுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதால், 1+1 = 3 என்று எனக்குத் தெரியும் என குறிப்பிட்டு இருந்தார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? நேற்று முன்தினம் அமலா பால் தனது கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் கர்ப்ப கால போட்டோஷூட் நடத்தி இருந்தார். அந்த வீடியோவால் தான் அமலா பால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருமணத்திற்கு முன்னரே ஜகத் தேசாய் உடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்த அமலா பால் அப்போதே கர்ப்பம் அடைந்துவிட்டார் என்றும், அதனால் தான், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் அவசர அவசரமாக திருமணம் செய்துக்கொண்டார் என்றும், சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X