தானே தயாரிக்கும் படத்தில் இரண்டு தமிழ் நடிகைகளை சிபாரிசு செய்த அமலா பால்... யாருன்னு பாருங்க!

சென்னை: தான் தயாரிக்கும் படத்தில் நடிகை அமலா பால், தமிழ் நடிகைகள் இருவரை சிபாரிசு செய்துள்ளார்.

மலையாள படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் மைனா படம் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, திருட்டு பயலே 2, ராட்சஸன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு நடிகை அமலா பால் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வெப் சீரிஸ்கள்

வெப் சீரிஸ்கள்

கடைசியாக ஆடை படத்தில் நடித்தார் அமலா பால். அந்தப் படத்தில் நிர்வாணமாக நடித்ததால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் நடிகை அமலா பால். அதன்பிறகு தமிழில் பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

கடாவர் படத்தில் அமலா பால்..

கடாவர் படத்தில் அமலா பால்..

நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் அமலா பால், தீவிர கதை தேடுதலில் ஈடுபட்டுள்ளார். அதோடு கதை பிடித்திருந்தால் அவரே தயாரிக்கவும் முன் வருகிறார். தற்போது கடாவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனூப்.எஸ் என்பவர் கூறிய கதை பிடித்திருந்ததால், படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

இரண்டு நடிகைகள் சிபாரிசு

இரண்டு நடிகைகள் சிபாரிசு

மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி, ரித்விகா இருவரையும் நடிக்க வைக்க இயக்குநரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் அமலா பால். இதனிடையே அமலா பால் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல படம் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. ஆடை படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததே அதோ அந்த பறவை போல படத்தை யாரும் ரிலீஸ் செய்ய முன் வராததற்கு காரணம் என கூறப்படுகிறது.

Recommended Video

Vijaysethupathi Romance with Samantha & Nayanthara - Kathuvakkula Rendu Kadhal
கிளாமர் போட்டோஸ்

கிளாமர் போட்டோஸ்

கிளாமர் போட்டோஸ் நடிகை அமலா பால் கடைசியாக பிட்ட காதலு என்ற தெலுங்கு வெப் சீரிஸில் நடித்தார். மேலும் ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் நடிகை அமலா பால். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள அமலா பால் அடிக்கடி தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X